This Article is From Apr 13, 2019

நீட் தேர்வுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு

கீழ்கண்ட இணைய தளத்தில் nta.ac.in, ntaneet.nic.in நுழைவுச்சீட்டை டவுண்லோட் செய்து கொள்ளலாம்

நீட் தேர்வுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு

நுழைவுச் சீட்டு வரும் ஏப்ரல் 15 அன்று வெளியிடப்படும்

New Delhi:

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வரும் ஏப்ரல் 15 அன்று வெளியிடப்படும்.தேசிய தேர்வு ஆணையம் பொறியியல், மருத்துவம் ஆகிய இளங்கலைப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. இதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஆன்லைனில் நுழைவுச் சீட்டு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 5 ம் தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 5 அறிவிக்கப்படுகிறது. 

நீட் தேர்வினை 2018 ஆண்டுவரை  சிபிஎஸ்இ கல்வி ஆணையம் நடத்திவந்தது. இந்த ஆண்டு முதல்  முறையாக தேசிய தேர்வு ஆணையம் நடத்தவுள்ளது. இந்த நிறுவனம் இரண்டு ஆண்டு தொடர்ச்சியாக பொறியியல் தேர்வினை நடத்தியுள்ளது. ஜேஎன்யூ மற்றும் ஐசிஏ ஆர் தேர்வுகளையும் நடத்தி வருகிறது.

இந்த தேர்வு பொது மருத்துவம்/பல் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வாக இது உள்ளது. 

.