NEET 2019: நீட் தேர்வுக்கு மாணவர்கள் எப்படி வரவேண்டும்
New Delhi: இந்தியாவெங்கும் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வு மே 5 நடைபெறுகிறது. தேசிய தேர்வு ஆணையம் இந்த தேர்வினை நடத்துகிறது.
தேர்வு ஆணையம் தேர்வுக்கு வரும் மாணவர்கள் எந்தவிதமான உடை அணிந்து வர வேண்டும் என்ற கட்டுபாடுகளை விதித்துள்ளது. முழுக்கை சட்டை அணிந்து வரக்கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். கால்களை மூடு விதமான செருப்பு மற்றும் ஷூக்களை அணியக்கூடாது சாதாரணமான செருப்பினை மட்டுமே அணிய வேண்டும்.
தேர்வு அறைக்குள் கலாச்சார மற்றும் மத ரீதியான உடைகளை அணிந்து வருபவர்கள் குறைந்தது ஒருமணிநேரத்திற்கு முன்பே தேர்வு எழுதும் பள்ளிக்கு வந்து விடவேண்டும். முறையான சோதனைக்கு பின்பே அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
“ தேசிய தேர்வு ஆணையம் கலாச்சாரத்தின் புனிதத்தை மதிக்கிறது. குறிப்பாக மாணவிகள் தேர்வு மையங்களுக்கு மதசார் உடைகளை அணிந்து வந்தால் அவர்களை எப்படி வழிநடத்த வேண்டும் என்று விரிவாக எடுத்துரைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
கண்ணாடி, வாட்ச், கைக்கடிகாரம், காபு ஆகியவை அணிந்து வரக்கூடாது. பேனா, ஸ்கேல், எழுதுவதற்கு அட்டை, ரப்பர், கால்குலேட்டர் ஆகியவற்றையும் எடுத்து வரக்கூடாது.
சர்க்கரை நோயுள்ள மாணவர்கள் தங்களுக்கான மருந்தினை எடுத்து வரலாம். சாப்பிடுவதற்கு வாழைப்பழம், ஆப்பிள், போன்ற பழங்களையும் கொண்டு வரலாம். பேக்செய்யப்பட்ட உணவுகள், சாக்லேட்களுக்கு அனுமதியில்லை.