Read in English
This Article is From Jul 17, 2018

சித்தா, ஆயுர்வேத மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு இல்லை - மாநில அரசு முடிவு

இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு ப்ளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைப்பெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

Advertisement
தெற்கு
Chennai :

சென்னை: இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு ப்ளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைப்பெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல் சித்தா, ஹோமியோபதி ஆயுர்வேத மருத்துவ படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு மதிப்பெண்களை பயன்படுத்த கோரி மாநில அரசுக்கு மத்திய அரசு ஆலோசனை தெரிவித்தது. இது தொடர்பாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மருத்துவ முறை சட்டத்தில் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைப்பெறும் என்று எந்த திருத்தங்களும் செய்யப்படவில்லை. அதனால், தமிழகத்தில் இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு ப்ளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாநில அரசுக்கு மத்திய அரசு இந்த மாற்றத்தை கொண்டு வருமாறு அறிவுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக மாநிலம் இந்த சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement