This Article is From Jun 22, 2018

அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு மையங்கள் - பிரகாஷ் ஜவடேக்கர்

பிரகாஷ் ஜவடேக்கர் அடுத்த ஆண்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு எழுத மையங்கள் அமைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்

Advertisement
Education Posted by

Highlights

  • குஜராத், கேரளாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது
  • மாணவர்கள் தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் போனது
  • அனைத்து மாவட்டங்களிலும் மையம் அமைக்கப்படும் என அமைச்சர் உறுதி
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் இன்று சென்னை ஐ.ஐ.டி வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அடுத்த ஆண்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு எழுத மையங்கள் அமைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

நடந்து முடிந்த நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் பலருக்கு குஜராத், கேரளா உள்ளிட்டு வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால் மாணவர்கள் தேர்வை சரியாக எழுத முடியாமல் சிரமப்பட்டனர். கேரளாவில் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் தந்தை மாரடைப்பில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சில மாணவர்களுக்கு மையம் ஒதுக்கப்பட்டதில் குளறுபடிகளும் ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்தும் கேள்விகள் கேட்க்கப்படும் என்றும், கேள்வித் தாள் தயாரிப்பில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து நல்ல மொழிபெயர்ப்பாளர்களை அரசு அனுப்ப வேண்டும் என்று கூறினார்.

Advertisement
தேசிய கல்விக் கொள்கை விரைவில் உருவாக்கப் பட உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால், மாநில கல்வி வாரியங்களை ஒன்றிணைக்கு திட்டம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
Advertisement