New Delhi: புது டெல்லி: மருத்துவ கலந்தாய்வு கமிட்டி (எம்சிசி) அனைத்திந்திய நீட் கலந்தாய்வின் இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான விருப்பத் தேர்வுப் பணியைத் தொடங்கியுள்ளது. விருப்பத் தேர்வு செய்யும் பணிகள் முடிந்த பிறகு, இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்காக பதிவு செய்திருந்த மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இரண்டாம் கட்ட கலந்தாய்வின் முடிவுகள் ஜூலை 12, 2018 அறிவிக்கப்படும்.
இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு பிறகும் காலியாக இருக்கும் இடங்கள் ஜூலை 23, 2018 அன்று மாநில ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும். மருத்துவ கலந்தாய்வு கமிட்டி இறுதி கட்ட கலந்தாய்வை ஆகஸ்டில் நடத்துகிறது. இந்த இறுதி கட்ட கலந்தாய்விற்கான இடங்கள் பற்றிய தகவல்கள் கமிட்டியின் இணையதளத்தில் ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வெளியிடப்படும்..
2018 நீட் தேர்வின் மூலம் அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 3, 2018 அன்று நிறைவடைந்தது. முதல் ஒதுக்கீடு பட்டியல் ஜூன் 22, 2018 அன்று வெளியிடப்பட்டது.
எம்சிசி வெளியிட்ட முதல்கட்ட ஒதுக்கீட்டு பட்டியலில், பெண்கள் கல்லூரிகளில் ஆண்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததனால் சர்ச்சைக்குள்ளானது. பிறகு அது சரிசெய்யப்பட்டு பட்டியல் மீண்டும் வெளியிடப்பட்டது.
நீட் 2018 தேர்வின் முடிவுகள் ஜூன் 4, 2018 அன்று அறிவிக்கப்பட்டது. பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 119 நிர்ணயிக்கப்பட்டது. பொது பிரிவில் உள்ள உடல் மாற்றுத் திறனாளிகளுக்கான கட் ஆஃப் 107 ஆக நிர்ணயிக்கப்பட்டது. மற்ற பிரிவினருக்கு கட் ஆஃப் 96 ஆகவும் உள்ளது.