நீட் கவுன்சிலிங் 2018: மறுபரிசீலனை செய்த மதிப்பெண் பட்டியலை வெளியிடுவது குறித்த முடிவை மருத்துவ கவுன்சிலிங் குழு ஒத்திவைத்துள்ளது. இதனால், தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் அளிக்கப்படுமா என்பதில் சந்தேகம் எழுத்துள்ளது
சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ள மனுவில், தமிழ் மொழியில் வெளியான நீட் தேர்வு வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டுள்ளன. எனவே, தவறாக கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு மொத்த மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விவரங்களை சிபிஎஸ்சி அறிந்திருந்தும், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“வினாக்களும் பதில்களும் தவறாக கேட்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.” என்று மனுதாரர் ஷாஜி செல்லம் தெரிவித்தார். சிபிஎஸ்சியின் தவறால், தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய 24,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வின் 720 மொத்த மதிப்பெண்களில் தமிழ் மொழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தால், சிபிஎஸ்இ தற்போது மறுபரிசீலனை செய்த தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.