This Article is From Sep 27, 2019

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மருத்துவ மாணவர் மற்றும் அவரின் தந்தை கைது

மருத்துவ மாணவர் உதித் சூர்யா மற்றும் தந்தை டாக்டர் கே.எஸ் வெங்கடேஷ் ஆகியோரை தமிழக காவல்துறையின் சிபிசிஐடி பிரிவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. 

Advertisement
தமிழ்நாடு Posted by

சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கூறப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக தந்தை -மகன் இருவரையும் தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. 

மருத்துவ மாணவர் உதித் சூர்யா மற்றும் தந்தை டாக்டர் கே.எஸ் வெங்கடேஷ் ஆகியோரை தமிழக காவல்துறையின் சிபிசிஐடி பிரிவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அதைத் தொடர்ந்து 15 நாட்கள் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சூர்யா சார்பாக மருத்துவ ஆள்மாறாட்டாக்காரர் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது. ஆள்மாறட்டக்காரர் சூர்யா சார்பாக 20 நாள் வகுப்பில் கலந்து கொண்டார். அதைதொடர்ந்து சூர்யா கல்லூரிக்கு வர ஆள்மாறாட்டம் செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. 

Advertisement