This Article is From Oct 18, 2019

நீட் ஆள்மாறாட்ட வழக்கு : 4000 மாணவர்களின் கைரேகைகள் சோதனை செய்யபடவுள்ளது

இந்தியா முழுவதும் உள்ள 38,000 மருத்துவ இடங்களில் 4,250 தமிழ்நாட்டில் உள்ளது, இருப்பினும், ஆள்மாறாட்ட ஊழல் தமிழக மாநிலத்தில் மட்டுமே வெளிவந்துள்ளது என்று தெரிவித்தார்.

தேர்வுகளை நடத்துதல், கவுன்சிலிங் மற்றும் மருத்துவக். கல்லூரியில் சேருவது போன்ற முழு செயல்முறையும் ஒருங்கிணைந்த செயல்முறையாக இருக்க வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம்

Chennai:

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பல்வேறு மருத்துவ படிப்புகளில் அனுமதிக்கப்பட்ட 4,250 மாணவர்களின் கட்டை விரல் பதிவுகளை வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளிடம்  ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றப்படவேண்டுமா என்று கேள்வியும் எழுப்பப்பட்டது. 

நீள் ஆள்மாறாட்டம் மோசடி வழக்கில் “மாணவர்கள் மாநிலத்திற்கு வெளியே எழுதப்பட்ட தேர்வு என்பதால் இந்த  மோசடி அகில இந்திய அளவில் நடத்தப்பட்டதாக  இருக்கலாம்.  பல்வேறு மாநிலங்களில் உள்ள பல மாணவர்கள் சேர்க்கை பெற்றிருக்கலாம். அதனால் இந்த வழக்கை ஏன் சிபிஐ விசாரிக்க கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

சிபிசிஐடியின் அதிகார வரம்பு மாநில அரசுக்கு மட்டுமே உட்பட்டது மருத்துவக் கல்லூரிகள் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் நிறுவனமான சிபிஐ விசாரிப்பது பொருத்தமானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.  

சிபிஐ இணைய இயக்குநரை ஒரு எதிர்மனுதாரர்களாக சேர்த்த நீதிபதிகள். நீட் ஆள்மாறாட்டம் வழக்கில் சிபிஐ விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

இந்த வழக்கில் நான்கு மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யபட்டுள்ளதாக மாநில அரசின் வழக்கறிஞர் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச். அரவிந்த் பாண்டியன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தியா முழுவதும் உள்ள 38,000 மருத்துவ இடங்களில் 4,250 தமிழ்நாட்டில் உள்ளது, இருப்பினும், ஆள்மாறாட்ட ஊழல் தமிழக மாநிலத்தில் மட்டுமே வெளிவந்துள்ளது என்று தெரிவித்தார். 

கல்லூரியில் சேர்க்கை பெற்ற மாணவர்களே நீட் எழுதிய நபர்களா என்பதை சரிபார்க்க வேண்டும் என்று கூறி, நீதிமன்றம்  என்.டி.ஏ-க்கு கட்டைவிரல் பதிவுகள் உட்பட அனைத்து விவரங்களையும் கைமுறையாக எடுத்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும். 

தேர்வுகளை நடத்துதல், கவுன்சிலிங் மற்றும் மருத்துவக். கல்லூரியில் சேருவது போன்ற முழு செயல்முறையும் ஒருங்கிணைந்த செயல்முறையாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்வு எழுதுபவர்களின் அங்க அடையாளங்கள், கட்டைவிரல் ரேகை, முக அங்கீகார தொழில்நுட்பமும் பயன்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

.