This Article is From Aug 28, 2020

நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!

NEET, JEET Exams: மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட 6 மாநிலங்கள்  உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளன. 

நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!
New Delhi:

மாணவர்களின் நலன் கருதி நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி ஆறு மாநில முதல்வர்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட 6 மாநிலங்கள்  உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளன. 

ஆகஸ்ட் 17ம் தேதி, இந்த இரண்டு முக்கிய நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க கோரி 11 மாணவர்கள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மாணவர்களின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்த முடியாது என்று நீதிமன்றம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், பஞ்சாப் , சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், புதுச்சேரி உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். 

இந்த ஆலோசனை கூட்டதில் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய ஏழு மாநில முதல்வர்கள் முடிவு செய்தனர். 

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை உடனடியாக நடத்துவதில் முனைப்பு காட்டும் மத்திய அரசின் நடவடிக்கை "இறுதியில் சுமையாக எங்கள் தலையில் இறங்கும்" என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

ஜேஇஇ தேர்வு செப்.1 முதல் 6ம் தேதி வரையும் நீட் தேர்வு செப்.13ம் தேதியும் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், நீட் தேர்வை தள்ளிவைக்க முடியாது என்று கடந்த 17.ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுமாறு 6 மாநிலங்கள் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு வரும் திங்கட்க்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாக தெரிகிறது. 

.