This Article is From Mar 28, 2020

கொரோனா அச்சுறுத்தலால் நீட் தேர்வை ஒத்தி வைத்தது மத்திய அரசு!!

பள்ளித் தேர்வு முதல் ஐஐடி, ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வுகள் வரை கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா அச்சுறுத்தலால் நீட் தேர்வை ஒத்தி வைத்தது மத்திய அரசு!!

மே 3-ம்தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

New Delhi:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மே 3-ம்தேதி நீட் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தேர்வு ரத்தாகியுள்ளது. மீண்டும் நீட் எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. 

பள்ளித் தேர்வு முதல் ஐஐடி, ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வுகள் வரை கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நாட்டின் முக்கிய தேர்வுகளில் ஒன்றான நீட்-ம் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ள மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், 'தேசிய தேர்வு முகமையிடம் நீட் தேர்வை ஒத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளேன். இடைப்பட்ட காலத்தை மாணவர்கள் தேர்வுக்காக நன்கு படிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். 

நீட் மற்று ஜே.இ.இ. மெய்ன் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த 2 தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஏப்ரல் 15-ம்தேதி முதல் ஆன்லைனில் கிடைக்கும். 

பொது மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் (சித்தா) மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. எய்ம்ஸ் மற்றும் ஜிப்மரை தவிர்த்து நாட்டில் உள்ள மருத்துவ கல்வி நிலையங்களில் இருக்கும் இடங்களுக்காக நீட் நடத்தப்படும். 

எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்வி நிலையங்களில் சேர்வதற்காக தனி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு முதல் அனைத்து மருத்துவ கல்வி நிலையங்களுக்கும் நீட் தேர்வுதான் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் தற்போது வரையில் 843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை ஏற்படுத்தியுள்ளது. 
 

Click here for more Education News

.