Read in English
This Article is From Jun 05, 2019

நீட் 2019 தேர்வு: ‘நீட் யூ.ஜி ரேங்க் கார்டு’ டவுன்லோடு செய்வது எப்படி?

என்.டி.ஏ அமைப்பு, 2019 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதேபோல தேர்வை எழுதிய மாணவர்களின் ரேங்க் குறித்த தகவலையும் என்.டி.ஏ வெளியிட்டுள்ளது.

Advertisement
Education Edited by

இந்த முறை நீட் தேர்வுகள் சுலபமானதாக இருந்தது என்று துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் கட்-ஆஃப் மார்க் மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

என்.டி.ஏ அமைப்பு, 2019 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதேபோல தேர்வை எழுதிய மாணவர்களின் ரேங்க் குறித்த தகவலையும் என்.டி.ஏ வெளியிட்டுள்ளது. இந்த முறை நீட் தேர்வுகள் சுலபமானதாக இருந்தது என்று துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் கட்-ஆஃப் மார்க் மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நீட் 2019 முடிவுகள்: எப்படி தெரிந்துகொள்வது?

ஸ்டெப் 1: ntaneet.nic.in என்ற இணையதளத்துக்கு செல்லுங்கள்.

Advertisement

ஸ்டெப் 2: முடிவுகளுக்காக கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: மாணவர்களுக்காக இருக்கும் தளத்திற்குள் லாக்-இன் செய்யவும்.

Advertisement

ஸ்டெப் 4: நீட் முடிவுகளை தெரிந்து கொள்ளவும்.

நேரடி லிங்க்: https://ntaneet.nic.in/NTANEET/result/ResultNEET.htm

Advertisement

இதைத் தரவிர்த்து என்.டி.ஏ அமைப்பு, நீட் 2019-க்கான ரேங்க் கார்டுகளையும் டிஜிலாக்கர் தளத்தில் அப்லோடு செய்யும். digilocker.gov.in என்ற தளத்தில் இது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

“எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் பட்டங்களுக்குப் படிக்க வேண்டும் என்றால், குறிப்பிட்ட ஆண்டில் நடத்தப்படும் நீட் தேர்வில் 50 சதவிகித மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.

Advertisement

அதே நேரத்தில், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 40 சதவிகித மதிப்பெண்களை எடுத்தால் தகுதி பெறுவார்கள். பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள் 45 சதவிகிம் மதிப்பெண்கள் எடுத்தால் தகுதி பெறுவார்கள். எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள் 40 சதவிகிதம் எடுத்தால் தகுதி பெறுவர்” என்று நீட் தேர்வு தகுதி வரையறுக்கப்பட்டுள்ளது. 

முடிவுகளை வெளியாவதைத் தொடர்ந்து என்.டி.ஏ அமைப்பு, அனைத்திந்திய அளவில் இருக்கும் 15 சதவிகித இடங்களுக்கான  மெரிட் பட்டியலை தயாரிக்கும். அதையடுத்து கவுன்சிலிங் நடைபெறும். 

Advertisement


 

Advertisement