Read in English
This Article is From Jun 05, 2019

நீட் தேர்வில் மாணவர்களை பின்னுக்கு தள்ளிய மாணவிகள்!!

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by

நீட் தேர்வை மொத்தம் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர்.

New Delhi:

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

நீட் தேர்வை எழுதுவதற்காக மொத்தம் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் விண்ணம் செய்திருந்தனர். அவர்களில் 14 லட்சத்து 10 ஆயிரத்து 755 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இதிலும் மொத்தம் 56.2 சதவீதம்பேர்தான் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 

தேர்வை எழுதியவர்களில் 57.11 சதவீத மாணவிளும், 55.7 சதவீத மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். நீட் தேர்வில் சிறந்த திறனை வெளிப்படுத்திய மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது. 

அதே நேரத்தில் கட் ஆஃப் மார்க்கும் கடந்த ஆண்டை விட தற்போது அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு பொதுப் பிரிவுக்கான கட் ஆஃப் மார்க் 119 ஆக இருந்த நிலையில் தற்போது 134 ஆக உயர்ந்துள்ளது. எஸ்சி, எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டை விட 11 உயர்ந்து 107 ஆக உள்ளது. 

Advertisement

நீட் தேர்வில் முதல் 50 இடங்களை பிடித்தவர்களில் 9 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement