This Article is From Dec 11, 2018

தோல்வி முகம் : ராஜஸ்தானில் பாஜக கட்சி அலுவலகம் காலி

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் முடிவுகள் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக அமையவில்லை.

Advertisement
இந்தியா Posted by

ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பான்மை பெறுவதற்கு 100 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 95 இடங்களிலும், பாஜக 81 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சி 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ஆட்சியைமப்பது சிக்கல் என்பதை அறிந்ததால் பாஜக தொண்டர்கள், தலைவர்கள் மத்தியில் சோகம் காணப்படுகிறது. இதனால் ஜெய்ப்பூரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
 

Advertisement