বাংলায় পড়ুন
This Article is From Oct 21, 2019

பிரபல டிவி நிகழ்ச்சியில் பெண் நடுவருக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த போட்டியாளர்! Video

போட்டியாளரின் அநாகரிக செயலை நிகழ்ச்சியின் நடுவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த சம்பவத்தால் அரங்கம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

Advertisement
Entertainment Edited by

பிரபல பாடகியும், நடன இயக்குனருமான நேஹா கக்கர்.

Highlights

  • Neha Kakkar features as one the judges on the show
  • Anu Malik and Vishal Dadlani co-judge the show
  • This is Neha's second season as a judge on Indian Idol
New Delhi:

பிரபல டிவி நிகழ்ச்சியில் பெண் நடுவருக்கு போட்டியாளர் ஒருவர் முத்தம் கொடுத்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

சோனி டிவி சேனலில் 'இந்தியன் ஐடோல்' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தங்களது இசைத் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். 

அவர்களை மதிப்பீடு செய்ய பாடகி நேஹா கக்கர், பாடகரும், இசையமைப்பாளருமான அனு மாலிக், இசையமைப்பாளர் விஷால் தத்லானி ஆகியோர் நடுவர்களாக இடம்பெற்றுள்ளனர். 

இதில் நிகழ்ச்சி ஒன்றின் ப்ரோமோ வீடியோவை சோனி டிவி வெளியிட்டுள்ளது. அதில் போட்டியாளர் ஒருவர் நேஹா கக்கருக்கு பரிசு ஒன்றை அளிக்கிறார். அதனை நேஹா பெற்றுக் கொள்ள, அவரைக் கட்டிபிடித்த போட்டியாளர் அவருக்கு கன்னத்தில் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்கிறார்.

Advertisement

வீடியோவைப் பார்க்க:

Advertisement

இந்த காட்சிகளால் அரங்கத்தில் இருந்த பார்வையாளர்களும், நடுவர்களும் அதிர்ச்சி அடைகின்றனர். எதிர்பாராத சம்பவத்தால் அதிர்ந்து போன நேஹா, போட்டியாளரிடம் இருந்து தூரமாக செல்கிறார்.

இதன்பின்னர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆதித்யா நாராயணன், சில்மிஷ போட்டியாளரை தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து, நிலைமை கட்டுக்குள் வந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

Advertisement

இந்தி திரையுலகில் மிகவும் பிரபலமான பாடகியாக நேஹா கக்கர் உள்ளார். சமீபத்தில் சிம்பா பாடத்தில் அவர் பாடிய 'ஆங்க் மாரே' பாடல் கோடிக்கணக்கான வியூசை யூடியுபில் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Advertisement