This Article is From Dec 06, 2018

நெற்பயிரின் வழி தமிழரின் பாரம்பரியத்தை மீட்டவர் நெல் ஜெயராமன்

பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாப்பதில் தன் வாழ்க்கையை முற்றும் முழுதாக அர்ப்பணித்ததால் நெல் ஜெயராமன் என்று அழைக்கப்பட்டார்

நெற்பயிரின் வழி தமிழரின் பாரம்பரியத்தை மீட்டவர் நெல் ஜெயராமன்

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதில் முக்கியப் பங்காற்றியவர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாப்பதில் தன் வாழ்க்கையை முற்றும் முழுதாக அர்ப்பணித்ததால் நெல் ஜெயராமன் என்று அழைக்கப்பட்டார்.

நம்மாழ்வரின் இளைஞர் குழுவில் பயிற்சி பெற்றவர். அவரின் வேண்டுகோளுக்கிணங்க பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்தார். ஒவ்வொரு ஆண்டும் திருத்துறைப் பூண்டி மாவட்டத்தில் நெல் திருவிழாவை நடத்தி வந்தார். 169 வகை பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்து மக்கள் மத்தியில் பெரும் பேரை பெற்றார்.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயராமன் அப்போலொ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை 5 மணியளவில் உயிரிழந்தார். நடிகர் சிவகார்த்திகேயன் நெல் ஜெயராமன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் செலவை ஏற்றுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தின் முக்கிய அரசியல் ஆளுமைகளான திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மதிமுக தலைவர் வைகோ, ஜி.கே வாசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கார்ப்ரேட் நிறுவனங்களில் வேலை பார்த்தவர்களை கூட விவசாய நிலத்தில் கால் பதிக்க வைத்து வேளாண் தொழிலை பார்க்க வைத்த பெருமை நெல் ஜெயராமனுக்கு உண்டு. நெற்பயிரின் வழி தமிழர்களின் பாரம்பரியத்தை மீண்ட நெல் ஜெயராமனை காலம் கைகொண்டது.

.