This Article is From Jul 29, 2019

நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!! டிஜிபி உத்தரவு!

வழக்கின் முக்கியத்துவத்தை கருதி அதனை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Written by

நெல்லையில் கடந்த 23-ம்தேதி 3 பேர் கொல்லப்பட்டனர்.

நெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கின் முக்கியத்துவத்தை கருதி அதனை சிபிசிஐடிக்கு மாற்றி  தமிழக காவல் துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். 

நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோர் கடந்த 23-ம்தேதி ரெட்டியார் பெட்டியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொல்லப்பட்டனர். 

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கும்பலாக வந்தவர்கள் சிலை இந்த கொடூர செயலை செய்து விட்டு தப்பியுள்ளனர். உமா மகேஸ்வரியின் மகள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோதுதான் இந்த 3 பேர் கொலையாகி இருந்தது தெரியவந்தது. 

அரசியல் காரணங்களுக்கா அல்லது சொத்துப்பிரச்னைக்காகவா இந்த கொலை நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மதுரையில் திமுகவை சேர்ந்த ஒருவரது பெயர் அடிபட்டது. அவரும் அதனை மறுத்திருந்த நிலையில் தற்போது வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

Advertisement

முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் இதனை சிபிசிஐடிக்கு தமிழக காவல்துறை மாற்றியுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement