This Article is From Jan 15, 2020

Nellai Kannan விவகாரம்: கைதுக்கு என்ன காரணம்..? - அவரே சொல்கிறார்!!

Nellai Kannan Row: நெல்லை கண்ணனுக்கு எதிராக பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மீது நெல்லை மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்தது

Nellai Kannan விவகாரம்: கைதுக்கு என்ன காரணம்..? - அவரே சொல்கிறார்!!

Nellai Kannan Row: கண்ணனுக்கு, நிபந்தனை ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது

Nellai Kannan Row: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக தமிழறிஞர் நெல்லை கண்ணன் இந்த மாதத் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு இந்த வழக்கில் கடந்த 10 ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருநெல்வேலியில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில், தமிழறிஞர் நெல்லை கண்ணன், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். 

அவர் பேச்சைத் தொடர்ந்து பாஜகவினர் காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளனர். அவரது பேச்சுக்கு அரசியல் தளத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல்கள் அதிகரித்தன. 

பொதுக் கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன், “எனக்கு மோடி மீது எந்த கோபமும் இல்லை. அவர் முட்டாள். அமித்ஷாதான் மத்திய அரசின் மூளையாக செயல்பட்டு வருகிறார். அவரை நீங்கள் சோலிய முடிப்பீர்கள் என்று நினைக்கிறேன்…” என எல்லோரையும் ஒருமையிலேயே பேசினார். தொடர்ந்து அவர் சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக பல்வேறு தரவுகளை முன்வைத்துப் பேசினார். அந்தக் கூட்டத்தில் பெருந்திரளான முஸ்லிம்கள் பங்கேற்றிருந்தனர்.

நெல்லை கண்ணனுக்கு எதிராக பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மீது நெல்லை மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அதன்பின்னர் கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ச்சியாக திருச்சி அருகே அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தனது கைதுக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்த கண்ணனுக்கு, நிபந்தனை ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் தினமும் வந்து கையெழுத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்தவரை செய்தியாளர்கள் சூழ்ந்தனர். “நெல்லைத் தமிழின் எல்லை தெரியாதவர்களால் வந்த சோதனைதான் இது,” என்று கைது குறித்து ஒரே வாக்கியத்தில் பதில் அளித்துவிட்டு நடையைக் கட்டினார் கண்ணன். 


 

.