This Article is From Jun 03, 2020

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தின் தேவலா பகுதியில் 9 சென்டி மீட்டர் மழை பெய்தது

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்!

அடுத்த 24 மணி நேரத்திற்குச் சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

தென் மேற்குப் பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் தெரிவிக்கையில், ‘அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தின் தேவலா பகுதியில் 9 சென்டி மீட்டர் மழை பெய்தது. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் சித்தார் மற்றும் பெருஞ்சானி பகுதிகளில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்திற்குச் சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



 

.