This Article is From Jun 12, 2020

வாக்குவாதத்தால் விபரீதம்! இந்தியரை சுட்டுக்கொன்ற நேபாள போலீஸ் - 2 பேர் படுகாயம்

சம்பவம் நடந்த எல்லைப் பகுதியில் முறையாக வேலி ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால் இருதரப்பினர் வந்து செல்வது சகஜமாக இருந்தது.  இந்த நிலையில் லாகன் யாதவ் என்ற இந்தியரின் மருமகளான நேபாளிப் பெண், தங்கள் பகுதிக்குள் வரக்கூடாது என்று நேபாள போலீசார் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. 

வாக்குவாதத்தால் விபரீதம்! இந்தியரை சுட்டுக்கொன்ற நேபாள போலீஸ் - 2 பேர் படுகாயம்

நடந்த சம்பவம் தொடர்பாக துணை ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹைலைட்ஸ்

  • நேபாள எல்லை போலீசாருடன் பீகார் மக்கள் வாக்குவாதம்
  • போலீசார் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு - 2 பேர் படுகாயம்
  • இந்திய துணை ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
Sitamarhi:

நேபாள போலீசாருக்கும் இந்தியர்களுக்கும் இடையே எல்லையில் நடந்த  மோதலின்போது இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ள பீகாரின் சிதாமர்கி மாவட்டத்தில் இன்று காலை சரியாக 8.40 க்கு நடந்துள்ளது. இந்த தகவலை துணை ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து, அவர்கள் நேபாள எல்லை பாதுகாப்பு படையினரை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

கிடைத்த தகவலின்படி, உள்ளூர் மக்களுக்கும் நேபாள எல்லை பாதுகாப்பு  படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் விகேஷ் யாதவ் என்ற 22 வயது இளைஞர் மீது நேபாள போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அடி வயிற்றில் குண்டுக் காயம் அடைந்த விகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உதய் தாகூர், உமேஷ் ராம் என்ற 2 இளைஞர்கள் படுகாயம் அடைந்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவம் நடந்த சிதாமர்கி, பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 85 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 

சம்பவம் நடந்த எல்லைப் பகுதியில் முறையாக வேலி ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால் இருதரப்பினர் வந்து செல்வது சகஜமாக இருந்தது.  இந்த நிலையில் லாகன் யாதவ் என்ற இந்தியரின் மருமகளான நேபாளிப் பெண், தங்கள் பகுதிக்குள் வரக்கூடாது என்று நேபாள போலீசார் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக எழுந்த வாக்குவாதம் பின்னர் துப்பாக்கிச்சூட்டில் போய் முடிந்துள்ளது. லாகன் யாதவை நேபாள  போலீசார் தங்களது கஸ்டடியில் வைத்துள்ளனர். 
 
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.