This Article is From Apr 24, 2019

தொடர் குண்டுவெடிப்புக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் வெடிகுண்டு கண்டெடுப்பு!!

கடந்த ஞாயிறன்று கொழும்புவில் 3 சர்ச்சுகள் மற்றும் 4 ஓட்டல்களில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தொடர் குண்டுவெடிப்புக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் வெடிகுண்டு கண்டெடுப்பு!!

சர்வதேச புலனாய்வு நிறுவனங்கள் இலங்கை குண்டுவெடிப்பு விசாரணையில் இறங்கியுள்ளன.

Colombo:

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புக்கு பின்னர் மீண்டும் ஒரு வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த தகவலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளளது. 

கடந்த ஞாயிறன்று கொழும்புவில் 3 சர்ச்சுகள் மற்றும் 4 ஓட்டல்களில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 320 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 500-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலை புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் நடந்திருக்கும் மிகப்பெரும் தாக்குதலாக இது கருதப்படுகிறது. 

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர். நியூசிலாந்தில் மசூதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. 

தாக்குதல் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் நடப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக இந்திய உளவுத்துறை இலங்கை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. 
 

(With inputs from Agencies)

.