This Article is From Aug 02, 2020

புதிய கல்விக் கொள்கை 2020; எந்த மொழியையும் திணிக்காது என தமிழில் மத்திய அமைச்சர் டிவிட்

புதிய கல்விக் கொள்கை மூன்று மொழிகள் கட்டாயப்படுத்தியருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
தமிழ்நாடு Written by

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை(NEP) 2020ஐ அமல்படுத்த சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்தது.

இந்த கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த அம்சத்தினை தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் தேசிய அளவில் பல கல்வியாளர்களும் எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே தமிழகத்தில் ஆங்கிலம் தமிழ் என இரு மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கக்கூடிய நிலையில் மும்மொழிக் கொள்கை அவசியமில்லாதது என பல அரசியல் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று புதியக் கல்விக் கொள்கை குறித்து, பல கல்வியாளர்கள் மற்றும் தோழமைக் கட்சிகளுடன் கருத்து மேடை நிகழ்வினை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நடத்தியுள்ளார்.

Advertisement

மும்மொழி திட்டத்திற்கு தமிழகத்தில் மேலெழுந்த எதிர்ப்பு காரணமாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், “மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது.” என தமிழில் டிவிட் செய்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை மூன்று மொழிகள் கட்டாயப்படுத்தியருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement