Read in English
This Article is From Jul 31, 2020

5ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி: புதிய கல்விக் கொள்கையை கொண்டாடும் சிவசேனா!

"பிரதமர் நரேந்திர மோடி ஒரு நல்ல வேலையைச் செய்துள்ளார். அவர் நாட்டின் கல்விக் கொள்கையை முற்றிலுமாக மாற்றியுள்ளார்.

Advertisement
இந்தியா

5ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி: புதிய கல்வி கொள்கையை கொண்டாடும் சிவசேனா!

ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதை விட இந்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்வி கொள்கை 2020 மிக முக்கியமானது, ஆனால் அதை முறையாக செயல்படுத்துவதில் கவலைகள் உள்ளதாக சிவசேனா தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியதாவது, "பிரதமர் நரேந்திர மோடி ஒரு நல்ல வேலையைச் செய்துள்ளார். அவர் நாட்டின் கல்விக் கொள்கையை முற்றிலுமாக மாற்றியுள்ளார். 34 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது பிரான்சிலிருந்து வந்த ரஃபேல் விமானங்களை விட முக்கியமானது.

இந்த புதிய கல்விக் கொள்கையுடன் நாட்டிற்கு இப்போது கல்வி அமைச்சகம் கிடைத்துள்ளதால் நாங்கள் அதை முக்கியமானதாக கருதுகிறோம். இதனால், இப்போது நாட்டிற்கு ஒரு கல்வி அமைச்சர் கிடைப்பார். ஒரு நபர் கல்வித்துறையில் அறிவுள்ளவராக இருந்தால் அவர் கல்வி அமைச்சராக ஆகலாம். நிதி தொடர்பான விவரங்கள் அறியாதவர்கள் அல்லது சுகாதாரம் தொடர்பான தகவல்கள் அறியாதவர்கள் பலர், பெரும்பாலும் அந்த அமைச்சகங்களில் பொறுப்பு வழங்கப்பட்டன. 

"ஐந்தாம் வகுப்பு வரையிலான கல்வி தாய்மொழியில் வைக்கப்படுவது சிறந்த விஷயம். சங் பரிவாரால் தாய்மொழி கல்விக்கான கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. ஒரே கேள்வி என்னவென்றால், இந்த தாய்மொழி கல்வியை அரசு பள்ளிகளில் மட்டுமே மட்டுப்படுத்தப்படக்கூடாது. ஆங்கில வழி பள்ளிகள், மிஷனரிகளின் கான்வென்ட் பள்ளிகள், மத்திய பள்ளிகள் உள்ளன, சர்வதேச பள்ளிகளும் உள்ள சூழலில் இந்த தாய்மொழி கல்வி விதியை எவ்வாறு செயல்படுத்துவோம்? என்று அதில் கோரப்பட்டது. 

"இன்று நாடு முழுவதும் ஆங்கிலத்தில் கல்வி அலை உள்ளது. மொழியும் கலாச்சாரமும் இதன் காரணமாக அழிந்து கொண்டிருக்கின்றன. வாழ்வாதாரம், வணிகம், தொழில் மற்றும் ஆராய்ச்சிக்கு தாய்மொழி பொருத்தமானதல்ல என்று மக்கள் கருதுகின்றனர். மும்பை மற்றும் தானே போன்ற நகரங்களில் மராத்தி பள்ளிகள் மூடப்பட்டன. மராத்தி ஆசிரியர்கள் வேலையில்லாமல் போனார்கள் என்று கூறியுள்ளது.

"ஒரு காலத்தில் இருந்த பத்தாவது, பன்னிரண்டாவது" கல்வித் தரம் இனி இருக்காது. பத்தாவது, பன்னிரண்டாவது அமைப்பில் சான்றிதழ்களின் முக்கியத்துவம் நீக்கப்பட்டது. மோடி அரசு சதவீத போட்டியை ஒழித்தது. இந்த புதிய கல்விக் கொள்கையின் பாடத்திட்டத்தை எந்த பல்கலைக்கழகம் தயாரிக்கும் என்பதையும், எந்த வல்லுநர்கள் எந்த பல்கலைக்கழக கிளையிலிருந்து வருகிறார்கள் என்பதையும் அறிய ஆவல் உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement