বাংলায় পড়ুন Read in English
This Article is From May 31, 2019

மோடி அரசின் மத்திய பட்ஜெட் ஜூலை 5-ம் தேதி தாக்கல்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

New Delhi:

புதிதாக பொறுப்பேற்றுள்ள மோடி அரசு ஜூலை  5-ம்தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல்  செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 

மக்களவை தேர்தலுக்கு முன்பாக மத்திய பாஜக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது. இதில்தான் வருமானவரி உச்ச வரம்பு ரூ. 5 லட்சம் வரைக்கும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது ஜூலை 5-ம்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. வர்த்தகத்துறை அமைச்சராக இருந்து அனுபவம் பெற்ற நிர்மலா சீதாராமனை, பிரதமர் மோடி நிதியமைச்சராக நியமித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். 

வளர்ச்சி விகிதத்தில் சீனாவை விட இந்தியா பின்தங்கியுள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement