வெற்றி பெற்றதற்கான பரிசை பெரும் சொவாமி. பணமாக பரிசை பெற்றுகொள்வதால் அவருக்கு $189 மில்லியன் வழங்கப்படுகிறது
ஹைலைட்ஸ்
- அதிக விலைக்கு வாங்கிய ஆர்ஞ்சு ஜூஸை ரிட்டர்ன் கொடுக்கச் செல்கிறார் சொவாமி
- கொடுத்த பணத்தில் 2 பவர்பால் லாட்டரிகளை வாங்குகிறார்
- லாட்டரியில் சொவாமிக்கு அடித்த ஜாக்பாட் $315 மில்லியன்
அமேரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் ஷாப்ரைட் என்ற கடையில் சொவாமி என்பவர், வாங்கிய ஆரஞ்சு ஜூஸை வேண்டாம் என திருப்பிக் கொடுக்க செல்லும் போது அடித்தது ஒரு பெரிய ஜாக்பாட். 5 டாலர்களுக்கு விற்கப்படும் ஜூஸை வாங்கி சென்ற சொவாமிக்கு பின்னர் தான், மற்ற கடைகளில் அது 2.5 டாலர்களுக்கே கிடைக்கும் என்று தெரிந்திருக்கிறது. எனவே ஆரஞ்சு ஜூஸை திருப்பி தர ஷாப்ரைட்டுக்கு சென்றுள்ளார்.
மே 19 ஆம் தேதி அரஞ்சு ஜூஸை திருப்பி கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக் கொண்டு பார்க்கையில், வாடிக்கையாளர் சேவை கவுன்டரில் 306 மில்லியன் டாலர்களுக்கான பவர்பால் ஜாக்பாட் டிக்கெட்கள் விற்கப்படுவதை கண்டுள்ளார். உடனே, ஆர்ஞசு ஜூஸை திருப்பி கொடுத்ததால் பெற்ற பணத்தை வைத்து ஜாக்பாட்டிற்கான இரண்டு டிக்கெட்டுகள் பெறுகிறார்.
அடுத்த நாள் காலையில், தனது வீட்டில், 55 வயதான சொவாமி வழக்கம் போல தனது தோட்டப்பணிகளை தொடர்ந்து, தனது காரை சர்விஸ் செய்ய முடிவு செய்து, மெக்கானிக்கிடம் எடுத்துச் சென்றுள்ளார்.
செல்லும் வழியில் 7-லெவன் என்ற கடையில், ஜாக்பாட் டிக்கெட்டின் நிலவரத்தை காண சென்றார்.
அப்போது நடந்ததை அவர் விளக்கும் விதமே சுவாரஸ்யமானது.
“முதல் டிக்கெட் எந்த பரிசும் வெல்லவில்லை. ஆனால் அடுத்த டிக்கெட்டை ஸ்கேன் செய்தபோது தான் பிரமித்துப்போனேன். எப்போதும் 2 அல்லது 4 டாலர்களே எனக்கு பரிசாக கிடைக்கும். அன்று கிடைத்ததை என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, கடை பணியாளரை ஒரு முறை சரிபார்க்க அழைத்தேன்.
கடை பணியாளர் சரிபார்த்துவிட்டு ,அவரும் பிரமித்து போனார், என் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது" என அந்த நொடியின் ஆச்சரியத்தில் இருந்து இன்னும் மீளாமல் பேசுகிறார் சொவாமி.
வெற்றி பெறுவதற்கான டிக்கெட் எண்கள் 3,6,9,17,56. இந்த எண்கள் தான் சொவாமிக்கு 315 மில்லியன் டாலர் ஜாக்பெட் வெல்ல காரணமாக இருந்த அதிர்ஷ்ட்ட எண்கள். 292.2 மில்லியனில் பேர்களில் ஒருவருக்கு மட்டுமே கிடைக்க இருந்த அதிர்ஷ்ட்டம் சொவாமிக்கு கிடைத்துள்ளது.
ஜாக்பாட் வெற்றியாளர் என தெரிந்தவுடன், அடுத்து வாழ்க்கை திட்டங்கள் குறித்து யோசிக்கத் தொடங்கிவிட்டார் சொவாமி.
இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான சொவாமி, 1996-ம் ஆண்டு ஆப்ரிக்க நாடு ஒன்றில் இருந்து அமேரிக்காவுக்கு குடி பெயர்ந்தவர். முன்னதாக, உணவு இறக்குமதி நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வந்த அவர், இப்போது வேலையை விட்டுவிட்டு, தனது வீட்டு கட்டிட வேலைகளுக்கும், மகளின் கல்லூரி படிப்பு செலவிற்கும், தனது கடன் பாக்கிகளுக்கும் ஜாக்பாட் பணத்தை செலவிட திட்டமிட்டுள்ளார். மேலும், நியூ ஜெர்ஸி நகரத்திலேயே இருந்து வெற்றியை கொண்டாடப் போவதாகவும் குதூகலித்துள்ளார்.
“எனக்கு இப்போது ஆரஞ்சு ஜூஸ் மிகவும் பிடித்திருக்கிறது” என்றார் சிரித்தபடி.
(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)Click for more
trending news