புல்வாமா தாக்குதலுக்கு மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது.
ஹைலைட்ஸ்
- பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் உதவியுடன் அமெரிக்கா வரைவு தீர்மானம்
- புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது.
- சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அசாரை சேர்க்க சீனா மூட்டுக்கட்டை
United Nations: பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரை கருப்புப் பட்டியிலில் சேர்க்க இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளின் உதவியுடன் அமெரிக்கா ஐ.நாவுக்கு வரைவு தீர்மானம் அனுப்பியுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை தடை செய்ய வேண்டும் எனவும், மசூத் அசாருக்கு எதிராக உலக நாடுகளுடன் ஆயுத விற்பனை செய்ய அதிகாரப்பூர்வ தடை விதிக்கவும், மசூத் அசார் சர்வதேச பயணம் மேற்கொள்ள தடை விதிக்கவும், அவனது சொத்துக்களை முடக்கவும் 15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட 3 நாடுகளும் கோரிக்கை விடுத்தது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத்தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ஜெய்ஷ்-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனை தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளும் ஐ.நா. அமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இதற்கு சீனா தொடர்ந்து முட்டுகட்டை போட்டு வந்தது.
இந்நிலையில், 15 உறுப்பினர்கள் கொண்ட கவுன்சிலில், பிரான்சு, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் வரைவு தீர்மானத்தை அமெரிக்கா அனுப்பியுள்ளது.