This Article is From Sep 05, 2018

புதிய தேசிய ஆட்டோ மொபைல் கொள்கையை அறிமுகப்படுத்த இருக்கிறது மத்திய அரசு

இந்த கொள்கை, வாகனங்கள் கக்கும் புகை அளவை கட்டுப்படுத்தவும், மாசற்ற போக்குவரத்துக்கும் வழி வகை செய்யும்

புதிய தேசிய ஆட்டோ மொபைல் கொள்கையை அறிமுகப்படுத்த இருக்கிறது மத்திய அரசு

புதிய தேசிய ஆட்டோ கொள்கை, தயார் செய்யப்பட்டு வருவதாக மத்திய கன ரக தொழில் துறை அமைச்சர் அனந்த் கீதே தெரிவித்துள்ளார். இந்த கொள்கை, வாகனங்கள் கக்கும் புகை அளவை கட்டுப்படுத்தவும், மாசற்ற போக்குவரத்துக்கும் வழி வகை செய்யும் என்றார் அவர்.

“ஆட்டோ மொபைல் துறை நிறுவனங்களின் கருத்துக்களைக் கேட்டு, அதற்கு ஏற்றபடி புதிய ஆட்டோ கொள்கை கொண்டு வரப்படும்”  என்றார்.

அமைச்சரவை அதிகாரிகளின் தகவல் படி, கடந்த 6 மாதங்களாக இந்த கொள்கையை வகுக்க, பல தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்க்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

முன்னர் வெளியிடப்பட்டிருந்த மாதிரிக் கொள்கை அறிக்கையில், ஆட்டோ மொபைல் துறைக்கு ஏற்ற வகையில் ஜி.எஸ்.டியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டிருந்தது. வாகனத்தின் நீளம், கார்பன் டை ஆக்ஸைட் அளவை பொறுத்து, வரி விதிப்பை கொண்டு வர வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.