This Article is From Nov 19, 2018

’அடுத்த 24 மணி நேரத்தில்…’- மழை குறித்து வானிலை மையம் முக்கிய தகவல்

மீனவர்கள், நவம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்

Advertisement
தெற்கு Posted by

தமிழகத்தில் கோரத் தாண்டவமாடிய ‘கஜா' புயலால், மாநிலத்தின் டெல்டா பகுதிகளும் கடலோர மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு தமிழக அளவில் மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கமாக தெரிவிக்க இன்று செய்தியாளர்களை சந்தித்தார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன். அப்போது அவர், ‘நேற்று தென் கிழக்கு வங்கப் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றுழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று தென் மேற்கு வங்கப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்குத் திசையில் நகர்ந்து நாளை, நவம்பர் 20 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் நிலை கொள்ளக் கூடும். இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை பெற ஓரளவுக்கு வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, இன்று மாலை முதல் தமிழக மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கும். அதைத் தொடர்ந்து நாளை மற்றும் மறுநாள் உள் மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கும்.

எனவே, அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை கடலோரங்களில் இருக்கும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும்.

Advertisement

கனமழையைப் பொறுத்தவரையில், கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் பெய்யக் கூடும்.

மீனவர்கள், நவம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Advertisement

சென்னையைப் பொறுத்தவரையில், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைப் பெய்யக் கூடும். 20 மற்றும் 21 தேதிகளைப் பொறுத்தவரை இடைவெளிவிட்டு மழை பெய்யக் கூடும்' என்று தகவல் தெரிவித்தார்.

Advertisement