This Article is From Jul 19, 2018

வருகிறது புதிய 100 ரூபாய் நோட்டு..!

இந்திய ரிசர்வ் வங்கி, புதிய வகை 100 ரூபாய் நோட்டை விரைவில் புழக்கத்தில் விடப் போகிறது

New Delhi:

இந்திய ரிசர்வ் வங்கி, புதிய வகை 100 ரூபாய் நோட்டை விரைவில் புழக்கத்தில் விடப் போகிறது. இந்நிலையில், அதன் வடிவமைப்பு மற்றும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

ஊதா நிறத்தில் இருக்கும் இந்தப் புதிய 100 ரூபாய் நோட்டின் பின் பக்கத்தில் குஜராத்தில் உள்ள ‘ராணி கி வாவ்’ சுவரின் படம் இடம் பெற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உயர் ரக ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தது மத்திய அரசு. அதையடுத்து, தொடர்ந்து புதிய ரக ரூபாய் நோட்டுகள் விடப்பட்டு வருகின்றன. முன்னர் புதிய வகை 2000, 500 மற்றும் 200, 50, 10 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. இந்நிலையில் தற்போது 100 ரூபாய் நோட்டு மக்கள் பயன்பாட்டுக்க வர உள்ளது. 

இந்தப் புதிய ரூபாய் நோட்டு குறித்து ரிசர்வ் வங்கி, ‘இந்த புதிய நோட்டு, ஊதா நிறத்தில் இருக்கும். 66 மில்லி மீட்டருக்கு 142 மில்லி மீட்டருக்கு இதன் வடிவமைப்பு அளவு இருக்கும். இதற்கு முன்னர் ரிசர்வ் வங்கி மூலம் புழக்கத்தில் விடப்பட்டுள்ள அனைத்து வித 100 ரூபாய் நோட்டுகளும் செல்லும். இந்தப் புதிய 100 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் கூடிய விரைவில் அதிகரிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது. 

.