Read in English
This Article is From Dec 31, 2019

New Year 2020: கடந்த 10 ஆண்டுகளில் அறிமுகமான முக்கிய 10 அரசியல் புதுமுகங்கள்!

New Year 2020: பல வருடங்களாக இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு மாற்றாக உருவெடுத்து வரும் இந்த புதிய அறிமுகங்கள், தங்கள் மாநிலங்களில் தேர்தல் சமன்பாடுகளையும் மாற்றி வருகின்றன.

Advertisement
இந்தியா Edited by

New Year 2020: இந்த தசாப்தத்தின் முக்கிய அரசியல் அறிமுகங்கள் பட்டியல் இங்கே..

கடந்த 10 ஆண்டுகளில், இந்திய அரசியல் பல மாற்றங்களை கண்டுவிட்டது. இந்த மாற்றத்திற்கான காரணமாக இருப்பது அரசியலில் புதிதாக அறிமுகமானவர்களே. இவர்கள் நாட்டின் அரசியிலில் புதிய யோசனைகளை ஊக்குவித்து வருகின்றனர். பல வருடங்களாக  இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு மாற்றாக உருவெடுத்து வரும் இந்த புதிய அறிமுகங்கள், தங்கள் மாநிலங்களில் தேர்தல் சமன்பாடுகளையும் மாற்றி வருகின்றன. சில இளம் தலைவர்கள் கிங் மேக்கர்களாக ஊருவெடுத்துள்ளனர். சிலர் பழைய தலைவர்களிடமிருந்து கவசத்தை தட்டிப் பறித்துள்ளனர். அப்படி இந்த தசாப்தத்தின் முக்கிய அரசியல் அறிமுகங்கள் பட்டியல் இங்கே..


அரவிந்த் கெஜ்ரிவால், 

அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரத்திற்கு வந்தது இன்னும் பல தலைவர்களை வியக்க வைக்கும் விஷயாமாக உள்ளது. 2010ஆம் ஆண்டில் லோக்பால் இயக்கத்தின் பின்னணியில் இருந்த ஒரு வருமான வரித்துறை அதிகாரியான கெஜ்ரிவால், 2012ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி என்ற கட்சியை துவங்கிய போது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். எனினும், கெஜ்ரிவால் தனது முயற்சியை எந்த தடையுமின்றி தொடர்ந்தார். இது 2013ம் ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸின் உதவியுடன் கெஜ்ரிவால் மிகப்பெரிய கட்சியான பாஜகவை மிஞ்சி ஒரு அரசாங்கத்தை அமைத்தார். ஆனால், அது 49 நாட்கள் மட்டுமே நீடித்தது. 

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 2015ல் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக தலைநகர் மக்களிடம் மன்னிப்பு கேட்டார். இவரது இலவச மின்சாரம் - நீர் போன்ற வாக்குறுதிகள் வெகுஜன மக்களிடம் எதிரொலித்தது. இதன்மூலம் டெல்லியல் மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றினார்.
 

Advertisement

ஜெகன் மோகன் ரெட்டி,


ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த 2009ல் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். இதன்பின்னர், அதே ஆண்டு அவரது தந்தை ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி உயிரிழந்தார். இதையடுத்து, முதல்வர் பதவி தொடர்பாக காங்கிரஸ் தலைமையுடன் ஜெகனுக்கு முரண்பாடு ஏற்பட்டது. இதனால், 2010ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெகன் விலகினார். 

பின்னர் 2011ல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை துவக்கினார். கட்சி துவங்கிய 16 மாதத்தில் சொத்துகுவிப்பு வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் நடைபெற்ற 2014 சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 67 இடங்களை கைப்பற்றியது. போட்டியிட்ட முதல் தேர்தலிலே காங்கிரஸூக்கு எதிர்கட்சியாக விளங்கியது. 

Advertisement

இதன்பின்னர் 2017ம் ஆண்டில் ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார். இதனை இரண்டு வருடங்களகா மேற்கொண்ட அவர், மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அந்த நடைபயணத்தை கைவிட்டார். அவரது விடாமுயற்சி இரண்டு தேர்தல்களில் அவர் மாபெரும் அளவில் வெற்றி பெற்றார். தொடர்ந்து, தற்போது புதிய ஆந்திர முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார்.


உத்தவ் தாக்கரே

சிவசேனாவின் நிறுவனர் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே 2002ல் அரசயிலில் அறிமுகமானார். பின்னர் 2012ல் அவரது தந்தை உயிரிழந்த பின்னர் கட்சியின் தலைவர் பொறுப்பேற்றார். அவரது தலைமையில் சிவசேனா பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்தது. 2019 வரை தாக்கரே ஆட்சியில் எந்த பதவியிலும் இருந்ததில்லை. இதன்பின்னர், 2019 மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் சிவசேனா - பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்றது. எனினும், சுழற்சி முறையில் முதல்வர் பதவி வழங்குவதாக பாஜக உறுதியளித்ததாக தாக்கரே கூறினார். பாஜக இதனை ஏற்க திட்டவட்டமாக மறுத்தது.

Advertisement

இதன்பின்னர் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா, கருத்தியல் ரீதியாக முரண்பட்ட தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்தார். இதனிடையே, எதிர்பாராத திருப்பமாக பாஜக தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் துணையுடன் ஆட்சி அமைத்தது. எனினும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாரும் அஜித் பவாரை பின்தொடர்ந்து, அவருடன் செல்லாததால், அந்த ஆட்சி 80 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. பின்னர் மகாராஷ்டிராவின் முதல்வரானார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே


நிர்மலா சீதாராமன்


மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜகாவில் சிறிய காலத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற ஒருவர் ஆவார். 2006ல் கட்சியில் சேர்ந்த அவர், 2010ல் பாஜக பிரதான எதிர்கட்சியாக வளர்ந்தபோது, கட்சியின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2014ல் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது, அவருக்கு முக்கியத்துவம் கூடியது. 2017ல் அமைச்சரவையில் இடம்பெற்ற அவர் இந்திரா காந்திக்கு பின்னர் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை வகித்த இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை பெற்றார் சீதாராமன். 

Advertisement

2019ல் நாட்டில் பெரும் பொருளாதார மந்திநிலை நிலவி வரும் நிலையில், அவர் நாட்டின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையை சமாளிக்க அவர் பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறார். இதன்மூலம் நாட்டின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் இவரும் ஒருவராக விளங்குகிறார்.

பிரியங்கா காந்தி,


ராகுல் காந்தி 2004ல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதிலிருந்து, அவரது தங்கை - பிரியங்கா காந்தி வாத்ரா அரசியலில் சேருவது குறித்து ஏராளமான ஊகங்கள் எழுந்தன. எவ்வாறாயினும், அவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்து விலகி இருந்தார், குடும்ப கோட்டைகளில் தனது பிரச்சாரங்களைத் தவிர்த்தார். 

Advertisement

இந்த ஆண்டு தொடக்கத்தில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னர், பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் காங்கிரஸைத் தள்ளிவிட்டன. கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமல்லாமல், 2022 உ.பி. சட்டமன்றத் தேர்தலுக்காகவும் அவர் கட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தேசிய தேர்தலில் காங்கிரஸ் மாநிலத்தில் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் பாட்டி இந்திரா காந்தியுடன் ஒத்திருப்பதாக சிலர் கூறும் பிரியங்கா காந்தி, நாட்டில் ஒரு வலுவான பாஜக எதிர்ப்புக் குரலாக தனது அடையாளத்தை வெளிப்படுத்தினார். 

பல மாதங்களாக, உ.பி. மற்றும் மையத்தில் உள்ள பாஜக அரசாங்கங்கள் மீது, விவசாய துயரங்கள், பொருளாதார மந்தநிலை முதல் குடிமக்களின் தேசப் பதிவு வரையிலான தலைப்புகளில் அவர் கடுமையான தாக்குதல்களைத் தொடங்கினார். அவர் பல சந்தர்ப்பங்களில் தெருக்களில் வந்துள்ளார். சமீபத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் மாணவர்கள் மீது பொலிஸ் ஒடுக்குமுறைக்குப் பின்னர், அவர் போராட்டம் நடந்த இடத்தை பார்வையிட்டு போராட்டக்காரர்களுடன் தனது ஒற்றுமையைக் காட்டினார்.

 
துஷ்யந்த் சவுதாலா

இந்திய தேசிய லோக் தள கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரனான துஷ்யந்த் சவுதாலா, 2014ஆம் ஆண்டில், இளைய எம்.பியால பதவியேற்றார். எனினும், கடந்த ஆண்டு, குடும்பத்தில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு, துஷ்யந்த் கிளர்ந்தெழுந்து தாத்தாவின் கட்சியில் இருந்து பிரிந்து சென்றார். பின்னர், ஜனநாயக ஜனதா கட்சியைத் தொடங்கினார். இதன்பின்னர், 2019 மக்களவைத் தேர்தலில் ஜே.ஜே.பியின் செயல்திறன் ஊக்கமளிக்கவில்லை. அக்கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்து. இந்த தோல்விக்கு சில மாதங்களுக்குப் பிறகு, மாநில சட்டசபை தேர்தலில் கட்சி 10 இடங்களை வென்றது. பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டுமே அரசாங்கத்தை உருவாக்க அவரது ஆதரவு தேவைப்பட்டதால், துஷயந்த் மனோகர் லால் கட்டார் அரசாங்கத்தில் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.


தேஜஷ்வி யாதவ்,

ஒரு அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு, லாலு யாதவின் இளைய மகன் தேஜஷ்வி யாதவ் அரசியலுக்குள் நுழைந்தது 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஒரு வெற்றியைக் பெற்று தந்ததது. ஜே.டி.யு - ஆர்.ஜே.டி ஆட்சியில் நிதீஷ் குமாரின் துணை முதல்வராக தேஜஸ்வி பதவியேற்றார். எனினும், 2017ஆம் ஆண்டில், தந்தை லாலு யாதவ் ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றதும், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததும், நிதீஷ்குமார் கூட்டணியை முடித்துவிட்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேஜஸ்வி. நிதிஷ் குமார் பின்னர் பாஜகவின் ஆதரவைப் பெற்று அரசாங்கத்தை அமைத்தார்.

தேஜஷ்வி யாதவ் தனது 28 வயதில் பீகாரில் எதிர்க்கட்சித் தலைவரானார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசு மீதான கடுமையான தாக்குதல்களால் அவர் பிரபலமாக அறியப்படுகிறார். நிதிஷ் குமாருக்கு எதிராக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பல சந்தர்ப்பங்களில் கண்டித்து பேசியுள்ளார்.

ஆதித்யா தாக்கரே

29 வயதே ஆகும் ஆதித்யா தாக்கரே மகாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேயின் மூத்த மகன் ஆவார். இவர் தாக்கரேவின் அரசியல் வாரிசாக பரவலாகக் கருதப்படுகிறார். கவிஞரான இவர் 2010ஆம் ஆண்டில் சேனாவின் இளைஞர் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். 

பின்னர் 2019ஆம் ஆண்டில், மும்பை வொர்லி தொகுதியில் இருந்து மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் தேர்தலில் போட்டியிட்ட தாக்கரே குடும்பத்தின் முதல் உறுப்பினரானார். மெட்ரோ கார் நிறுத்தத்திற்காக மும்பையின் கிரீன் பெல்ட்டில் மரங்களை வெட்டுவதற்கு எதிரான போராட்டத்தின் போது, அவர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்தார். 

தேஜஸ்வி சூர்யா, 


மக்களவைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் தேஜஸ்வி சூர்யா பெயர் இடம்பெற்றிருந்து வாக்காளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மறைந்த பாஜகவின் தலைவரான அனந்த் குமாரின் மனைவி தேஜஸ்வினி அனந்த்குமார் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு அரசியல் ஆர்வலரும், இளைஞர் பாஜக அலுவலக பொறுப்பாளருமான சூர்யா இதற்கு முன்னர் ஒரு தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. காங்கிரசின் பி.கே.ஹரிபிரசாத்தை 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, நாடாளுமன்றத்தில் பாஜகவை பிரதிநிதித்துவப்படுத்திய இளைய எம்.பி.ஆவார். 


பெமா காண்டு


2011ல் மறைந்த தந்தையின் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பெமா காண்டு வெற்றி பெற்றார். இதன்பின்னர் அவர், அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, 2016ஆம் ஆண்டில், அவர் தனது 37 வயதில் அருணாச்சல பிரதேச முதல்வரானார். பின்னர் பல மாதங்களுக்குப் பிறகு அவர் 43 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கொண்ட ஒரு குழுவிற்கு தலைமை தாங்கினார். அவர்கள் பாஜக நட்பு கட்சியான அருணாச்சல பிரதேச மக்கள் கட்சியில் (பிபிஏ) சேர்ந்தனர். 

பின்னர் அதே ஆண்டில் அவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பல எம்.பி.க்களுடன் பாஜகவில் சேர்ந்தார். பின்னர் அவர் தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபித்தார். இதன்மூலம் மாநிலத்தில் இரண்டாவது பாஜக முதல்வராக ஆனார்.

Advertisement