Read in English
This Article is From Feb 06, 2019

ஃபேஸ்புக்கின் 15வது வருட கொண்டாட்டத்தை விமர்சித்த நியூயார்க் டைம்ஸ்!

நியூயார்க் டைம்ஸின் ஒப்பீனியன் பக்கத்தில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஃபேஸ்புக் இன்றோடு 15 வருடங்களாகிறது. ஃபேஸ்புக் ஆரம்பித்து அதற்குள் ரோலர்கோஸ்டர் போல எத்தனை ஏற்ற இறக்கங்கள் என்ற செய்தியோடு கூடிய வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்தது நியூயார்க் டைம்ஸ்.

Advertisement
உலகம்

வீடியொ பகிரப்பட்ட ஒரு மணி நேரத்தில் 3.75 லட்சம் பார்வையாளர்களையும், 3,000க்கும் அதிகமான பகிர்தலையும் பெற்றுள்ளது. 

San Francisco:

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை ஃபேஸ்புக்கின் வழியிலேயே அதற்கு ஒரு வீடியோவை வழங்கியுள்ளது. ஃபேஸ்புக்கின் நாஸ்டாலஜிக் வருட முடிவு வீடியோக்களின் வடிவில் ஒரு வீடியோவை மார்க் சக்கர்பெர்க்குக்காக ஃபேஸ்புக்கின் ஸ்டைலிலேயே தயாரித்துள்ளது. அதில் ப்ரைவஸி, ஹாக்கிங், வெறுப்படைய வைக்கும் செய்திகள், வன்முறை போன்றவற்றை சுட்டிக்காட்டியுள்ளது. 

நியூயார்க் டைம்ஸின் ஒப்பீனியன் பக்கத்தில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஃபேஸ்புக் இன்றோடு 15 வருடங்களாகிறது. ஃபேஸ்புக் ஆரம்பித்து அதற்குள் ரோலர்கோஸ்டர் போல எத்தனை ஏற்ற இறக்கங்கள் என்ற செய்தியோடு கூடிய வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்தது நியூயார்க் டைம்ஸ்.

இந்த இரண்டு நிமிட வீடியோவை நட்பின் வருடாந்திர கொண்டாட்டமாக மார்க் சக்கர்பெர்க்குக்கு அளிப்பதாக நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது. 

Advertisement

இந்த வீடியொ பகிரப்பட்ட ஒரு மணி நேரத்தில் 3.75 லட்சம் பார்வையாளர்களையும், 3,000க்கும் அதிகமான பகிர்தலையும் பெற்றுள்ளது. 

இந்த வீடியோவில் இறுதியில் நீங்கள் பயன்பாட்டாளர்களின் தகவல்களை மற்றவர்களுக்கு கொடுக்கிறீர்கள். ஆனால் நீங்கள் பெரிதாக எந்த தவறும் செய்யவிலை என்று கிண்டலாக பதிவிட்டிருந்தது.

"மார்க் சக்கர்பெர்க் தனது 15வது ஆண்டு உரையில் சமூகத்தின் நேர்மறை சக்தியாக ஃபேஸ்புக் உருவெடுக்கபட வேண்டும்" என்று கூறினார். மேலும் "தவறான கருத்துகள், போலி செய்திகள், குற்றங்கள் மற்றும் சமூக பிரச்னைகள் விஷயத்தில் ஃபேஸ்புக் மீதுள்ள விமர்சனத்தை களையவேண்டும்" என்றார். 

Advertisement

15 ஆண்டுகளுக்கு முன்னாள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள மார்க் சகர்பெர்க்கின் நண்பர்களோடு இணைந்து சக்கர்பெர்க் உருவாக்கிய 'தி பேஸ்புக்'கின் எழுச்சிதான் தற்போதைய ஃபேஸ்புக். இதனை உலகை இணைப்போம் என்ற கொள்கையில் மார்க் சக்கர்பெர்க் முன்னிறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement