அடையாளம் தெரியாத நபர்கள் அதன் ஷோரூம் தொலைக்காட்சியை எப்படியோ இயக்கியுள்ளனர் என ஆஸிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sydney: நியூசிலாந்தின் பிரபலமான ஷோரூம் ஒன்றின் வெளியே உள்ள பெரிய திரையில் சுமார் ஒன்பது மணி நேரமாக, ஆபாச திரைப்படம் ஒளிப்பரப்பானது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, ஜப்பானை சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நிறுவனமான ஆஸிக்ஸ் மன்னிப்பு கோரியுள்ளது.
ஷோரூம் ஒன்றின் வெளியே உள்ள பெரிய திரையில் சுமார் ஒன்பது மணி நேரமாக, ஆபாச திரைப்படம் ஒளிப்பரப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து காலை 10மணிக்கு அதன் ஊழியர் வந்து தொலைக்காட்சியை அணைக்கும் வரை அது ஒளிப்பரப்பானது என நியூசிலாந்த் ஹெரால்டு தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த ஷோரூமின் செக்யூரிட்டி கூறும்போது, ஆபாச திரைப்படம் ஒளிபரப்பானதை பார்த்து பலர் அதிர்ச்சியடைந்தனர். ஒரு சிலர் நின்று நிதானமாக பார்த்துச்சென்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அந்த வழியாக தனது 7வயது மகனுடன் சென்ற தான்யா லீ என்பவர் கூறும்போது, அங்கு ஒளிப்பரப்பான காட்சிகள் என்பது, குழந்தைகளுக்கு நாம் தெரியப்படுத்த விரும்பாதது. இது முற்றிலும் தவறானது மற்றும் தண்டனைக்குரியது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆஸிக்ஸ் நிறுவனம் தனது முகநூல் பதிவில் அளித்துள்ள விளக்கத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ எங்களின் ஷோரூம் தொலைக்காட்சியை இயக்கும் அணுமதியை பெற்றுள்ளனர். இதனால், ஆட்சேபனைக்குரிய காட்சிகள் திரைகளில் ஒளிபரப்பாகியுள்ளது. இதனை பார்த்த அனைவரிடமும் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம் என்று என ஆஸிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதவாறு, தங்களது மென்பொருளை மேம்படுத்தவும், ஆன்லைன் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.