10 நாட்களுக்கு முன்னர் பகிரப்பட்ட இந்த வீடியோவானது, பல லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளன.
நியூசிலாந்து நாட்டு அரசு, விழிப்புணர்வு பிரசாரத்துக்காக இரண்டு ஆபாசப் பட (Porn) நடிகர்களை பயன்படுத்தியுள்ளது. நியூசிலாந்தில் மட்டுமல்லாமல், பல நாடுகளிலும் கவனம் ஈர்த்துள்ளது இந்த விளம்பரம்.
Keep It Real Online என்னும் பிரசாரத்திற்காக இந்த விளம்பரப் படம் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஆபாசப் படங்களில் காட்டப்படும் உறவு முறைக்கும், உண்மை வாழ்க்கையில் இருக்கும் உறவு முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதைத்தான் இந்த விளம்பரப் படம் சுட்டிக்காட்டுகிறது.
விளம்பரத்தில் இரண்டு ஆபாசப் பட நடிகர்கள் நிர்வாணமாக ஒரு வீட்டின் காலிங் பெல்லை அழுத்துகின்றனர். வீட்டில் இருக்கும் தாய், கதவைத் திறக்கிறார். அப்போது தாங்கள் யார் என்பதை அறிமுகம் செய்து கொள்ளும் நடிகர்கள், வீட்டில் இருக்கும் சிறுவன் தங்களின் படங்களைப் பார்த்து உறவு முறை குறித்து தவறான புரிதலைக் கொண்டுள்ளான் என்றும் விவரிக்கின்றனர். இந்த நேரத்தில் லாப்டாப்போடு வெளியேவரும் வீட்டுச் சிறுவன், அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போகிறான். இப்படி கலகலப்பாக முடியும் அந்த வீடியோ, சொல்ல வந்த விஷயத்தையும் முறையாக சொல்லிவிட்டுச் செல்கிறது.
இந்த வைரல் விளம்பரம் குறித்து நியூசிலாந்து அரசின் செய்தித் தொடர்பாளர், ‘இந்த விழிப்புணர்வுப் பிரசாரமானது ஆபாசப் படங்கள், ஆன்லைனில் மற்றவர்களால் கொடுக்கப்படும் மன உளைச்சல்கள் மற்றும் பல்வேறு இணையம் சம்பந்தமான பிரச்னைகள் பற்றி தெரியப்படுத்தவே உருவாக்கப்பட்டது. இதுவரை இந்த விளம்பரத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது,' என்கிறார் பெருமையுடன்.
10 நாட்களுக்கு முன்னர் பகிரப்பட்ட இந்த வீடியோவானது, பல லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளன.
யூ-டியூபில் மட்டும் இந்த விளம்பரத்துக்கு 20 லட்சம் பார்வைகளை குவிந்துள்ளன.
செய்தித் தொடர்பாளர் மேலும் பேசுகையில், ‘பல இளம் தலைமுறையினர் செக்ஸ் பற்றி ஆபாசப் படங்கள் மூலமே தெரிந்து கொள்கிறார்கள். இது பல கட்டங்களில் அவர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும். அதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும்தான் இந்த பிரசார யுக்தி,' என்கிறார்.
ஜூலை இறுதி வரை இந்த பிரசாரம் செயல்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click for more
trending news