ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அச்செட்டிப்பள்ளி என்ற கிராமத்தில், முட்புதரினுள் இருந்து ஒரு பச்சிளங்குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியை கடந்த இருவர் முட்புதரில் சென்று பார்த்தபோது, பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்துள்ளது.
பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில் தரையில் கிடந்த அந்த குழந்தையின் உடலில் எறும்புகள் கடித்திருந்தன. உடனே, குழந்தையை மீட்ட பொதுமக்கள், ஓசூர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். மேலும், குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் நடைப்பெற்று வருவதாக குழந்தையை மீட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால், அச்செட்டிப்பள்ளி பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)