This Article is From Apr 20, 2020

ராஜஸ்தானில் பிறந்த குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்!

நேற்றைய தினம் நாக்பூரில் எஸ்எம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராஜஸ்தானில் பிறந்த குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்!

ராஜஸ்தானில் பிறந்த குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்! (Representational)

ஹைலைட்ஸ்

  • ராஜஸ்தானில் பிறந்த குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்!
  • அந்த குழந்தையின் தாய் மற்றும் தந்தை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்
  • நாக்பூரில் இதுவரை 59 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Jaipur:

ராஜஸ்தான் மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் பிறந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி சுகுமார் காஷ்யாப் கூறும்போது, கடந்த சனிக்கிழமையன்று பிறந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தையின் தாய் மற்றும் தந்தை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள் என்று அவர் கூறினார்.  

அந்த கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்ட பாஸ்னி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள அதிகாரி சாதாப் கூறும்போது, குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது பற்றி அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினமே குழந்தையின் சோதனை முடிவுகள் வெளிவந்தன. 

நாக்பூரில் இதுவரை 59 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, நேற்றைய தினம் அங்கு எஸ்எம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 543ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,553 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் கடந்த மார்ச்.25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்று முதல் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் விதமாக ஹாட்ஸ்பாட் அல்லாத பகுதிகளில் ஒருசில துறைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
 

.