Read in English
This Article is From Sep 10, 2018

கார்த்தி சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்கிறது அமலாக்கத்துறை

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், கார்த்தி சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்திடம் அமலாக்கத்துறை கோரிக்கை.

Advertisement
இந்தியா Posted by

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், கார்த்தி சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் கோரியுள்ளது அமலாக்கத்துறை. இதற்கு கார்த்தி தரப்பில் பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி, கார்த்தி தரப்பு வழக்கறிஞர்களிடம், செப்டம்பர் 18-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத் துறை கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால், தற்போது கைது செய்ய விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும்.
கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட போது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என கார்த்திக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால், அவர் சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
விசாரணையின் போது கோபமடைவதாகவும், எரிந்து விழுவதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகையால், இடைக்காலமாக, கைதில் இருந்து அவருக்கு அளிக்கப்பட்ட விலக்கை ரத்து செய்யுமாறு அமலாக்கதுறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 7-ம் தேதி, டெல்லி சிறப்பு நீதிமன்றம், அக்டோபர் 8-ம் தேதி வரை கார்த்தியை கைது செய்ய தடை விதித்தது. ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் சி.பி.ஐ-யின்  குற்றப்பத்திரிக்கையில் ஜூலை 19-ம் தேதி சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement