இன்னொருவரோ, “இது ஒரு ஜீனியஸ் ஐடியா” என்கிறார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆஸ்திரேலிய நாட்டு மக்கள், அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி குவித்து வருகிறார்கள். இதில் நிறைய பேர், டாய்லெட் பேப்பர்களை அளவுக்கு அதிகமாக வாங்கி சேமித்து வருகிறார்கள். இதனால் பல சூப்பர் மார்க்கெட்டுகளில், டாய்லெட் பேப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு செய்தித்தாள் நிறுவனம், ‘மாஸ்டர் பிளான்' ஒன்றை செயல்படுத்தியுள்ளது. NT நியூஸ் எனப்படும் அந்த அந்த செய்தி நிறுவனம், தங்களது செய்தித் தாளில் கூடுதல் பக்கங்களை சேர்த்து விநியோகம் செய்துள்ளது. இந்த புதுவித ஐடியா, பலரை திக்குமுக்காட வைத்துள்ளது.
தி கார்டியன் செய்தி நிறுவனம் அளிக்கும் தகவல்படி, என்டி நியூஸ், தங்களது வேடிக்கையான முதல் பக்கத்துக்கு பெயர் போனதாம். கடந்த வியாழக்கிழமை என்டி நியூஸ், 8 பக்கங்களை கூடுதலாக சேர்த்து விற்றுள்ளனர். அதில் தெளிவாக மக்கள், கூடுதல் பக்கங்களை டாய்லெட் பேப்பராக பயன்படுத்தலாம் என்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்த ஒரு விளக்கும் வீடியோவையும் என்டி நியூஸ், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.
அந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 2.8 லட்சம் தடவைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. 5,000 பேர் லைக் தட்டியுள்ளனர். பலரும் அதற்கு வேற லெவர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
“ஹா ஹா ஹா… இந்த பேப்பரை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது,” என்கிறார் ஒருவர்.
இன்னொருவரோ, “இது ஒரு ஜீனியஸ் ஐடியா” என்கிறார்.
இந்த ‘பலே' ஐடியா குறித்து என்டி செய்தித் தாளின் ஆசிரியர், மேட் வில்லியம்ஸ், “எங்கள் வாசகர்களின் தேவையை அறிந்து செயல்படும் செய்தித்தாள் நிறுவனம் நாங்கள். இப்போது எங்கள் வாசகர்களுக்கு டாய்லெட் பேப்பர் தேவைப்பட்டது. ஆகவே, அதை வழங்கினோம்,” என்று கூலாக சொல்கிறார்.
டாய்லெட் பேப்பர்களை மொத்த மொத்தமாக வாங்குவதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில், #ToiletPaperEmergency மற்றும் #ToiletPaperApocalypse என்கிற ஹாஷ்-டேக்குகள் டிரெண்டாகின.
ஆஸ்திரேலியாவில் 42வது நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் மளிகை கடைகளில் டாய்லெட் பேப்பர்கள் விற்பனை எதிர்பாராத வகையில் ஏடாகுடமாக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து கடையின் உரிமையாளர்கள், டாய்லெட் பேப்பர் வாங்குவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
Click for more
trending news