Wellington, New Zealand: நியூசிலாந்து நாட்டின் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஜூலி ஜென்ட்டர் தனது பிரசவத்துக்கு சைக்கிளில் மருத்துவமனை சென்றது உலக அளவில் ட்ரெண்டாகியுள்ளது. 42 வார கர்ப்பிணியாக இருக்கும் ஜென்ட்டர், பிரசவ நேரம் வந்ததால், மருத்துவமனைக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து இணை அமைச்சராகவும் இருக்கும் ஜென்ட்டர், சுற்றுச் சூழல் பாதிப்பற்ற போக்குவர்த்துக்கான திட்டங்களையும் அதற்கான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார்.
தனது வீட்டில் இருந்து ஆக்லாந்து சிட்டி மருத்துவமனைக்கு ஒரு கிலோமீட்டர் சைக்கிளில் சென்றுள்ளார் ஜென்ட்டர். போகும் வழியில் சைக்கிளுடன் உள்ள தனது படத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
ஜென்ட்டர் மற்றும் அல்ல, இதற்கு முன் கடந்த ஜூன் மாதம், நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா அர்டெர்ன், பதவியில் இருக்கும் போதே குழந்தையை பெற்றெடுத்தார். பெண்கள் உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு என்பதால் ஜென்ட்டரின் செயல், மிகவும் இயல்பாகவே பார்க்கப்படுகிறது. உலக அளவில் இரண்டு பெண் பிரதமர்கள் மட்டுமே பதவியில் இருக்கும் போதே குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். முதலாவதாக 1990-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் பெனசிர் பூட்டோ அதற்கு பின், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா அர்டெர்ன் தான் அந்த பெருமையை பெற்ற இரண்டாவது பெண்.