This Article is From Oct 29, 2019

Rain Alert for TN - தேதியைக் குறிங்க… தமிழக அளவில அடுத்த பெரிய மழை அக். 27, 28-ல வருமாம்!

Rain Alert for TN -"சென்னையில் வழக்கத்தை விட 33 மில்லி மீட்டர் அதிக மழை பெய்துள்ளது.”

Advertisement
தமிழ்நாடு Written by

Rain Alert for TN - "தமிழகத்தில் இதுவரை வழக்கமாக பெய்வதைவிட 11 மில்லி மீட்டர் அதிக மழை பெய்துள்ளது."

Rain Alert for TN - வடகிழக்கு பருவமழை (NEM) சில நாட்களுக்கு முன்னால் தொடங்கியதில் இருந்து சென்னை (Chennai) உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் தொடர்ந்து மழை (Rain) பெய்து வந்தன. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக பரவலாக மழையின் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக பரவலான மழை எப்போது ஆரம்பிக்கும் என்பது குறித்து பிரபல வானிலை கணிப்பாளர், தமிழ்நாடு வெதர்மேன் (Tamilnadu Weatherman), பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், “வெப்பச் சலனத்தால் தமிழக அளவில் பெரும் மழை பெய்ததைத் தொடர்ந்து மிகவும் அமைதியான ஒரு நாளாக இது இருக்கிறது. அடுத்ததாக வரும் அக்டோபர் 27, 28 ஆம் தேதி மீண்டும் பரவலான மழை பொழிய ஆரம்பிக்கலாம். 

இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னைக்கு நல்ல மழை பெய்திருக்க வேண்டியது. ஆனால், என்ன காரணத்தினாலோ அது தவறிவிட்டது. இருப்பினும் சென்னை நீர் நிலைகளுக்கு நல்ல நீர் வரத்து, நல்ல நிலையில் இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை வழக்கமாக பெய்வதைவிட 11 மில்லி மீட்டர் அதிக மழை பெய்துள்ளது.

சென்னையில் வழக்கத்தை விட 33 மில்லி மீட்டர் அதிக மழை பெய்துள்ளது,” என்று தகவல் தெரிவித்துள்ளார். 
 

Advertisement
Advertisement