This Article is From Aug 23, 2018

ஸ்டெர்லைட் விவகாரத்தில் முடிவெடுக்க முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது

குழுவில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகத்தின் சார்பாகவும் உறுப்பினர்கள் இடம் பெறுகின்றனர்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் முடிவெடுக்க முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது குறித்த விவகாரத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஜே.வாஜிஃப்தார் தலைமையில் மூன்று நபர் குழு ஒன்றை அமைத்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம்.

இரு தரப்பிலும் விசாரித்து இறுதி முடிவை, இந்த விசாரணை குழு எடுக்க வேண்டும் என நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்த குழுவில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகத்தின் சார்பாகவும் உறுப்பினர்கள் இடம் பெறுகின்றனர். இந்த குழு ஸ்டெர்லைட் ஆலைக்கு நேரில் சென்று தரவுகளை பெற வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்த குழு 2 வாரத்துக்குள் தங்கள் பணிகளைத் தொடங்கி, 6 வாரத்துக்குள் பணியை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.