குழந்தைக்கு மூச்சுவிட ஆக்ஸிஜன் குழாய்கள் விடப்பட்டன.
Hisar, Haryana: ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒன்றை வயது குழந்தையை 48 மணிநேர போராட்டத்திற்குப் பின் வெள்ளிக்கிழமை பத்திரமாக மீட்டுள்ளனர். ஹரியானாவில் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பால்சமந் என்ற கிராமத்தில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள 60 அடி ஆழ்துளை கிணற்றில் சிறு குழந்தை ஒன்று தவறி விழுந்துள்ளது.
பெரிய போராட்டத்திற்குப் பின் இந்தக் குழந்தை காப்பற்றப்பட்டுள்ளது. காப்பற்றப்பட்ட குழந்தை மருந்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளது. ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையின் செயல்பாடுகள் நைட்- விஷன் கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டன. என்று ஹிசார் மாவட்ட டிஎஸ்பி கூறியுள்ளார்.
கடந்த புதன் கிழமை மாலை 5 மணியளவில் சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளான். 48 மணிநேர போராட்டத்திற்கு பின் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் ராணுவ நிபுணர்கள் குழு இணைந்து காவல் துறை அதிகாரிகள் உதவியுடன் மீட்பு நடவடிக்கை துரிதமாக நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தவர்கள் குழந்தை மீது மண் விழுந்து விடக்கூடாது என்பதற்காக மிஷினால் தோண்டுவதை நிறுத்தி விட்டு கைகளால் மண்ணை அள்ளினர்.
குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் 20 அடி தூரத்தில் அதற்கு இணையாக மற்றொரு குழியைத் தோண்டி சுரங்கப் பாதை உருவாக்கி குழந்தையை மீட்டனர். குழந்தையின் தந்தை ஒரு கூலித் தொழிலாளி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைக்கு மூச்சுவிட ஆக்ஸிஜன் குழாய்கள் விடப்பட்டன. பிஸ்கட் மற்றும் ஜூஸ் ஆகியவை குழந்தைக்கு வழங்கப்பட்டன.
சம்பவ இடத்தில் மருத்துவ குழுவும் நியமிக்கப்பட்டது. துணை கமிஷ்னர் அசோக் குமார் மீனா, அனுமதி இல்லாமல் போட்டப்பட்ட ஆழ்துளைக் கிணறினை போட்ட உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். தண்ணீர் இல்லையென்றால் அதை முறையாக மூட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் ஆழ்துளைக் கிணறுகள் குழ்ந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மரண பொறிகளாக மாறியுள்ளது.