This Article is From Aug 27, 2018

உதகை: யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 11 ரிசார்ட்டுகளுக்கு சீல்

உடனடியாக சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்கவும் என்று ஆகஸ்ட் 9 இல் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

Advertisement
தெற்கு Posted by

யானைகள் செல்லும் வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த 11 ரிசார்ட்டுகளுக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சீல் இன்று வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட ரிசார்ட்டுகளில் பிரபல முன்னாள் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு சொந்தமான ரிசார்ட்டும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

யானைகள் செல்லும் வழித்தடத்தை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, 39 ரிசார்ட்டுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக 27 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மீதமுள்ள 12 கட்டிடங்களுக்கு நேற்று உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நோட்டீஸ் தரப்பட்டிருந்தது. அதற்கான கெடு முடிவடைந்ததால் 11 ரிசார்ட்டுகளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.

யானைகள் தேசிய பாரம்பரியம் ஆகும். நீலகிரியில் அவற்றின் வழித்தடத்தில் குறுக்கீடு செய்யும் விதமாக கட்டிடங்கள் எப்பட்டிக் கட்டப்பட்டன என்று தெரியவில்லை. உடனடியாக சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்கவும் என்று ஆகஸ்ட் 9 இல் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement