மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-
ரஃபேல் விவகாரம் குறித்து தகவல் தெரிவித்த முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே, தனது உதவியாளர்கள் லஞ்சம் பெற்றதால்தான் தன் மீது புகார்கள் எழுந்ததாக கூறியுள்ளார். அது உண்மையாகவும் இருக்கலாம். அல்லது பொய்யாகவும் இருக்கலாம். அவர் இந்த தகவலை கடந்த 21-ம் தேதி வெளியிட்டார்.ஆனால் அதற்கு முன்பாக கடந்த ஆகஸ்ட் 30-ம்தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில், ரஃபேல் போர் விமான பேரத்தில் சர்வதேச அளவில் முறைகேடு நடந்திருக்கிறது. பிரான்சில் பெரிய பிரச்னை உருவாகி உள்ளது என்று மோடி ஜி, அனில் அம்பானியிடம் கூறுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஹாலந்தே சொல்லவிருந்ததை முன்கூட்டியே ராகுல் காந்தி எப்படி கணித்தார்?. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)