மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் குறித்து பிரதமரிடம் ஏற்கனவே பேசியுள்ளதாக கூறியுள்ளார் நிரஞ்சன் ஜோதி.
ஹைலைட்ஸ்
- மக்கள்தொகை கட்டுப்பாடு சட்டம் கொண்டுவரப்படலாம் என்கிறார் நிரஞ்சன் ஜோதி
- மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர் போனவர்
- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்து ஜோதி பேசியுள்ளார்.
Mathura: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு பின்னர் அடுத்ததாக மத்திய அரசு மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டத்தை கொண்டு வரக்கூடும் என்று மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் குறித்து பிரதமரிடம் ஏற்கனவே பேசியுள்ளதாக கூறியுள்ளார் நிரஞ்சன் ஜோதி.
இந்த சட்டத்தை கொண்டு வருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியிருப்பதாகவும், இதற்கு பிரதமர் முக்கியத்துவம் அளித்திருப்பதாகவும் ஜோதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் சுவாமி வம்தேவ் ஜோதிர்மாதில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் உன்னாவே தொகுதி எம்.பி.யும், மத்திய அமைச்சருமான சாத்வி நிரஞ்சன் ஜோதி கலந்துகொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது-
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கவே முடியாது என்றார்கள். ஆனால் அதை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இப்படி செய்வதால், ரத்த ஆறு ஓடும் என்றார்கள். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.
ஜம்மு காஷ்மீரில் யாரும் தேசியக் கொடியை வைத்திருப்பதில்லை. மத்திய அரசு இந்தியாவின் நலனுக்கான எந்தவொரு சட்டத்தையும் கொண்டுவரும். இப்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்ட பிரிவு 370 நீக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு நல்லது செய்யும் எந்த சட்டத்தையும் பிரதமர் மோடி கொண்டு வருவார்.
இவ்வாறு நிரஞ்சன் ஜோதி தெரிவித்தார்.