This Article is From Apr 26, 2019

நீரவ் மோடியின் ஜாமீன் கோரிக்கையை நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்!

பஞ்சாப் தேசிய வங்கியில் கடன்பெற்று மோசடி செய்த புகாரின்பேரில் வைர வியாபாரி நீரவ் மோடி தேடப்பட்டு வருகிறார்.

நீரவ் மோடியின் ஜாமீன் கோரிக்கையை நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்!

நீரவ் மோடியை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

பஞ்சாப் தேசிய வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த புகாரில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமின் கோரிக்கையை லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வாண்ட்ஸ்வோர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலமாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின் முடிவில், ‘மீண்டும் நீங்கள் மே 24-ம்தேதி விசாரணைக்கு அழைக்கப்படுவீர்கள். முழு விசாரணை மே 30-ம்தேதி நடக்கும்' என்று நீதிபதி கூறினார்.

முன்னதாக கடந்த மார்ச் 29-ம்தேதி நிரவ் மோடி கோரிக்கை வைத்தபோது, அன்றைய தினம் ஜாமின் மறுக்கப்பட்டது. ரூ. 13 ஆயிரம் கோடி மோசடி விவகாரத்தில் நிரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்ஸி தேடிப்பட்டு வருகிறார்.

அவருக்கு கடந்த 2018 ஜனவரி 15-ம்தேதி ஆண்டிகுவா மற்றும் பர்படாவில் குடியுரிமை வழங்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

நிரவ் கைது செய்யப்பட்டிருந்தாலும் அவரை உடனடியாக இந்தியாவுக்கு கொண்டு வர முடியாது என்பதே நடைமுறை உண்மையாக உள்ளது.

ரூ. 9 ஆயிரம் வங்கி மோசடி வழக்கில் விஜய் மல்லையா கடந்த 2017-ல் இங்கிலாந்து சென்றார். அவரை இந்தியா கொண்டு வருவதில் இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது.

With input from PTI

.