Read in English हिंदी में पढ़ें
This Article is From Jan 18, 2020

சோனியாவை உதாரணம் காட்டி பேசிய இந்திரா ஜெய்சிங்: கொதித்தெழுந்த நிர்பயா தாயார்!

தனது கணவரும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்காக தண்டிக்கப்பட்ட நளினி முருகனின் கருணையை சோனியா காந்தி ஏற்றுக்கொண்டார் என்பதை உதாரணம் காட்டி அதனை பின்பற்றுமாறு நிர்பயா தாயார் ஆஷா தேவியிடம் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

இந்திரா ஜெய்சிங் போன்றவர்களே தொடர் பாலியல் வன்கொடுமை நடப்பதற்கு காரணம் என ஆஷா தேவி தெரிவித்துள்ளார். (File)

New Delhi:

நிர்பயா குற்றவாளிகளை மன்னித்து அவர்களின் தூக்கு தண்டனையை நிறுத்த உதவுமாறு தன்னிடம் வலியுறுத்திய மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கடுமையாக விமர்சித்துள்ளார். 

கடந்த 2012ம் ஆண்டில் 23வயது மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 4 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு இரும்பு கம்பிகளால் கடுமையாக தாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். 13 நாட்கள் போராட்டத்தை தொடர்ந்து பல்வேறு கட்ட சிகிச்சைகளும் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். தலைநகர் டெல்லியில் நடந்த இந்த கொடூர சம்பவம் உலத்தையே உலுக்கியது. 

இந்நிலையில், நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, இது போன்று வலியுறுத்துவதற்கு எப்படி தைரியம் இருக்கிறது என்று என்னால் நம்ப முடியவில்லை.

இத்தனை வருடங்களில் நான் அவரை உச்ச நீதிமன்றத்தில் பலமுறை சந்தித்துள்ளேன். நான் நன்றாக இருக்கிறேனே என்று ஒருமுறை கூட கேட்காத அவர், இன்று குற்றவாளிகளுக்கு ஆதரவாக என்னிடம் பேசுகிறார். இதுபோன்ற ஆட்களால் தான் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 

எனக்கு அறிவுரை வழங்குவதற்கு இந்திரா ஜெய்சிங் யார்? மொத்த நாடும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இருக்கிறது. ஆனால், இவரை போன்ற ஆட்களால் தான் பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பதில்லை.  

Advertisement

முன்னதாக, நேற்றைய தினம் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, தனது கணவரும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்காக தண்டிக்கப்பட்ட நளினி முருகனின் கருணையை சோனியா காந்தி ஏற்றுக்கொண்டார் என்பதை உதாரணம் காட்டி அதனை பின்பற்றுமாறு நிர்பயா தாயார் ஆஷா தேவியிடம் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளார். 

நளினிக்கு மரண தண்டனை வேண்டாம் என்று கூறிய சோனியா காந்தியை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்ட அவர், ஆஷா தேவியின் வழி எனக்கு புரிகிறிது. அவர்களுடம் நாங்கள் துணை நிற்கிறோம் ஆனால், மரண தண்டனைக்கு எதிராக என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

ஏற்கனவே, நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தாமதமாவது குறித்து ஆஷா தேவி கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், இந்த விவகாரம் அரசியல் ஆக்கப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Advertisement