বাংলায় পড়ুন Read in English
This Article is From Jan 27, 2020

நிர்பயா வழக்கு: குற்றவாளி முகேஷின் மனுவை விரைந்து விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல்!

Nirbhaya Case: குற்றவாளி முகேஷ் சிங்கின் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

Advertisement
இந்தியா Edited by

Nirbhaya Case: குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் சிங் மற்றும் பவன் குப்தா ஆகியோர் வரும் சனிக்கிழமை தூக்கிலிடப்பட உள்ளனர்.

New Delhi:

குற்றவாளிகள் பிப்.1ம் தேதி தூக்கிலிடப்பட உள்ள நிலையில், அவர்களது மனுவுக்கே முதலில் முன்னுரிமை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார். நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரில் ஒருவரான முகேஷ் சிங் குடியரசுத் தலைவர் தனது கருணை மனுவை நிராகரித்ததற்கு எதிராக கடந்த சனிக்கிழமையன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, குற்றவாளி முகேஷ் சிங்கின் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று  அவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் இன்று முறையிட்டார். இதையடுத்து, ”யாரேனும், பிப்.1ஆம் தேதி தூக்கிலடப்பட உள்ளனர் என்றால், அதனை விட அவசரமானது வேறு எதுவும் இல்லை” என்று கூறிய தலைமை நீதிபதி வழக்கை பட்டியலிடுவது தொடர்பாக பதிவாளரிடம் முறையிட அறிவுறுத்தியுள்ளார். 

நிர்பயா வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் சிங் மற்றும் பவன் குப்தா ஆகியோர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். 2012-ல் அவர்கள் செய்த குற்றத்துக்காக இந்த தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. பிப்ரவரி 1-ம்தேதி தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வழக்கில் குற்றவாளியான ஒருவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னொருவர் சிறார் என்பதால் அவருக்கு 3 ஆண்டுகள் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். 

Advertisement

முன்னதாக இந்த மாத தொடக்கதில் 2 குற்றவாளிகளின் சீராய்வு மனு டெல்லி நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி 22-ம்தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, இன்னொரு குற்றவாளி முகேஷ் குமார் சிங் குடியரசு தலைவருக்கு கருணை மனுவை அனுப்பினார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதன் பின்னர், மரண தண்டனை நிறைவேற்றப்படும் தேதி பிப்ரவரி 1 காலை 6 மணி என மாற்றி அமைக்கப்பட்டது. 

Advertisement

முன்னதாக, திகார் சிறை அதிகாரிகள் குடியரசு தலைவரிடம் அனுப்பப்பட்ட கருணை மனுவுக்கு போதிய ஆவணங்கள் ஏதும் அளிக்கவில்லை என்று கூறி குற்றவாளிகள் தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எதிர்த்தரப்பில் குற்றவாளிகள் யுக்திகளை கையாண்டு தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. 

மரண தண்டனை குற்றவாளிகள் இவ்வாறு தங்களுக்கு தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிப்போட, பல்வேறு யுக்திகளை கையாளுகிறார்கள் என்று கருதிய மத்திய அரசு இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடியது. மரண தண்டனை கைதிகளின் தண்டனையை நிறைவேற்றுவது குறித்து நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 

Advertisement