বাংলায় পড়ুন Read in English
This Article is From Jan 09, 2020

தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி நிர்பயா குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு!

குற்றவாளிகள் 4 பேரும் ஜன.22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள் என்று டெல்லி நீதிமன்றம் அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் வினய் சர்மா உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

தூக்குதண்டனையை எதிர்த்து வினய் சர்மா உச்சநீதிமன்றத்தில் முறையீடு.

Highlights

  • Vinay Sharma filed petition in Supreme Court against his death sentence
  • 4 Nirbhaya case convicts will be hanged on January 22, a court had said
  • All four reportedly broke down in jail after the death warrant
New Delhi:

தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி நிர்பயா கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளார். குற்றவாளிகள் 4 பேரும் ஜன.22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள் என்று டெல்லி நீதிமன்றம் அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் வினய் சர்மா உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். 

முகேஷ் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26) மற்றும் அக்‌ஷய் குமார் (31) ஆகியோரை திகார் சிறையில் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அதிகாரிகள் தயார்படுத்த தொடங்கியதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மரண தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அறிந்த சிறையில் நான்கு பேரும் மனமுடைந்ததாக கூறப்படுகிறது. இந்த உத்தரவுப்படி 14 நாட்களில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். மேலும், குற்றவாளிகள் சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தூக்கிலிடப்படும் வரை, நான்கு குற்றவாளிகளும் தனிமைச் சிறையில் இருப்பார்கள். அவர்கள் குடும்ப உறுப்பினர்களை கடைசியாக சந்திப்பதற்கும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், திகார் சிறையில் குற்றவாளிகளை தூக்கிலிட அவர்களின் எடைகளை அறிந்து அதே எடையில் போலியான உருவத்தை தூக்கிலிட்டு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

தூக்குத் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூலையில் நிராகரிக்கப்பட்டு கீழ் நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை உறுதி செய்தன. அதன்பின்னர் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இறுதி வாய்ப்பாக, கருணை மனுக்களும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது.

Advertisement

டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி நள்ளிரவில் ஓடும் பேருந்தில் 6 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்டார். மீட்கப்பட்ட அப்பெண், மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி அதே மாதம் 29ம் தேதி உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர், திகார் சிறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். மற்ற 5 பேரில், சிறுவன் என்பதால் சிறார் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைவாசத்தை அனுபவித்த பின் விடுவிக்கப்பட்டு தற்போது மத்திய அரசின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மற்ற 4 குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி செப்டம்பர் 2013ல் உத்தரவிட்டது. 

Advertisement