This Article is From Mar 03, 2020

பவன் குப்தாவின் கருணை மனுவைப் பெற்றுக் கொண்டது உள்துறை அமைச்சகம்!!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பவன் குப்தாவின் கருணை மனு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும்.

பவன் குப்தாவின் கருணை மனுவைப் பெற்றுக் கொண்டது உள்துறை அமைச்சகம்!!

பவன் குப்தாவின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்திருந்தது.

ஹைலைட்ஸ்

  • கருணை மனு உள்துறை அமைச்சகத்தின் வழியே குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும்
  • ஏற்கனவே 3 பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது
  • 4 குற்றவாளிகளுக்கும் நாளை மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது
New Delhi:

நிர்பயா வழக்கில் குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் பெற்றுக் கொண்டுள்ளது. நாளை பவன் குப்தா உள்ளிட்ட 4 பேருக்கு மரண தண்டனை வழங்கப்படவுள்ளது. 

கருணை மனுவைப் பெற்றுக் கொண்டுள்ள உள்துறை அமைச்சகம் அதனைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும். 

தெற்கு டெல்லியில் 2012 டிசம்பர் 6-ம்தேதி 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா (அச்சமற்றவள்) ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே தள்ளி விடப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

பல்வேறுகட்ட சிகிச்சைகளுக்குப் பின்னர் அவர் சிங்கப்பூரின் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் டிசம்பர் 29-ம்தேதி அவரது உயிர் பிரிந்தது.

இந்த சம்பவத்தில் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் குமார் சிங், பவன் குப்தா, ராம் சிங் மற்றும் சிறுவன் ஒருவன் என 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர். 

இதில் முகேஷ், வினய், அக்சயின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். ராம் சிங் சிறையில் தற்கொலை செய்துகொள்ளக் குற்றவாளியான சிறுவன் தனது தண்டனைக் காலத்தைச் சீர்திருத்தப் பள்ளியில் கழித்த பின்னர் விடுவிக்கப்பட்டான்.

இந்த நிலையில் கடைசி வாய்ப்பாக மீதம் இருக்கும் பவன் குப்தா தற்போது குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுவை அனுப்பியுள்ளார். 

.