This Article is From Mar 17, 2020

நிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷின் மறுசீராய்வு மனு கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!!

குற்றவாளிகள் நான்கு பேரில் 3 பேருக்கு ஏற்கனவே குடியரசுத் தலைவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. 4-வது நபரான பவன் குப்தாவின் மனுவையும் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். இதனால் அவர்கள் தப்பிப்பதற்கு வேறு வழியே இல்லை.

வழக்கில் முக்கிய குற்றவாளியான ராம் சிங் சிறையில் தூக்கிட்டு ற்கொலை செய்துகொண்டார்.

New Delhi:

நிர்பயா வழக்கில் வரும் வெள்ளியன்று குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்படவுள்ளனர். இந்தநிலையில், தண்டனையை எதிர்த்து மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்யுமாறு குற்றவாளி முகேஷ் சிங் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

'இனிமேலும் தண்டனையைத் தள்ளிப் போடுவதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை. முகேஷ் சிங் கருணை மனுத்தாக்கல் செய்தார். அது நிராகரிக்கப்பட்டு விட்டது. மரண தண்டனைக்கான வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மறு சீராய்வு மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. வேறு ஏதேனும் சட்ட வழிகள் உள்ளதா?' என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முகேஷ் சிங் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'நீதிமன்றங்கள் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும், கருணை மனுவை நிராகரித்து குடியரசுத் தலைவரின் உத்தரவையும் ரத்து செய்யுங்கள். உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு நிராகரிக்கப்பட்டதிலிருந்து எனது வழக்கறிஞர் என்னைத் தவறாக வழிநடத்தினார். ' என்று கூறியுள்ளார். 

நிர்பயா வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளுக்கும் வரும் வெள்ளியன்று காலை 5.30-க்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. 

நான்கு பேரில் 3 பேருக்கு ஏற்கனவே குடியரசுத் தலைவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. 4-வது நபரான பவன் குப்தாவின் மனுவையும் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். இதனால் அவர்கள் தப்பிப்பதற்கு வேறு வழியே இல்லை. 

இதன் தொடர்ச்சியாகக் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தர்மேந்திர ரானா குற்றவாளிகள் மார்ச் 20-ம்தேதி தூக்கிலிடப்படுவார்கள் என்று அறிவித்தார். அனைத்து விதமான சட்ட உரிமைகளையும் பயன்படுத்தி விட்டோம் என்று குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞரும் தெரிவித்து விட்டார். 

இதனால் குற்றவாளிகளான அக்சய் தாகூர் 31, பவன் குப்தா 25, வினய் சர்மா 26, முகேஷ் சிங் 32 ஆகியோர் எதிர்வரும் வெள்ளியன்று தூக்கிலிடப்படவுள்ளனர்.

இந்த வழக்கில் சிறுவன் ஒருவன் குற்றவாளி. அவன் சீர் திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அவனது 3 ஆண்டு தண்டனைக் காலம் முடிந்து வெளியே சென்றுவிட்ட நிலையில், அவன் யார் என்பது குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

வழக்கில் முக்கிய குற்றவாளியான ராம் சிங் சிறையில் தூக்கிட்டு ற்கொலை செய்துகொண்டார். 

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவின் பாலியல் பலாத்கார கொலை வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு இந்தியாவில் பல சட்ட மாறுதல்களை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது. 

.