This Article is From Jan 24, 2020

நிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிட உள்ள ஹேங்மேன் அவர்களைப் பற்றி சொல்வது என்ன?

Nirbhaya Case: அவர்களை முறைப்படி தூக்கிலிட அரசு தரப்பால் நியமிக்கப்பட்ட ஹேங்மேன்தான் பவண் குமார்.

Advertisement
இந்தியா Edited by

Nirbhaya Case: பிப்ரவரி 1 காலை 6 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Meerut, India :

Nirbhaya Case -

இந்தியாவையே உலுக்கிய 2012 நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு அடுத்த மாதம் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அவர்களைத் தூக்கிலிட இருக்கும் ஹேங்மேன், பவண் குமார். தற்போது அவர் குற்றவாளிகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். 

“தூக்குத் தண்டனை பெறப் போகிறவர்கள் மிருகங்கள். அவர்கள் மனிதர்கள் அல்ல,” என்று உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட்டில் வசிக்கும் பவண் குமார், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்கிறார். அவர் மேலும், “அவர்கள் மிகக் கொடூரமானவர்கள். அந்த காரணத்தினால்தான் தற்போது இறக்க உள்ளார்கள்,” என்றார். 

2012 ஆம் ஆண்டு டிசம்பரில் மருத்துவ மாணவி நிர்பயா, டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே தள்ளி விடப்பட்டார். படுகாயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி அந்த மாதமே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. உடனடியாக வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகளின் தண்டனை உறுதி செய்யப்பட்டு, தூக்கிலிடும் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்னர் புதிய சிக்கல் ஏற்பட்டது. ஜனவரி 22 புதன்கிழமை காலை 7 மணிக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இதற்கிடையே, குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பி வைத்தார்.  இதற்கிடையே, குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக டெல்லி அரசு, குற்றவாளிகளுக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்தது. கருணை மனு காரணமாக குற்றவாளிகளின் தண்டனை நிறைவேற்றப்படுவது 14 நாட்கள் வரையில் தள்ளிப் போகலாம் எனத் தகவல்கள் வெளிவந்தன.
 

பவண் குமாருக்கு குற்றவாளிகள் மீது எந்தக் கருணையும் இருக்கவில்லை.

இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள். அவர்களில் ராம் சிங் என்பவர் திகார் சிறையில் விசாரணையின்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குற்றவாளிகளில் ஒருவர் சிறுவர் ஆவார். அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். தற்போது மீதமுள்ள முகேஷ் சிங், வினய் ஷர்மா, அக்‌ஷய் தாக்கூர் மற்றும் பவண் குப்தா ஆகிய 4 பேருக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 1 காலை 6 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை முறைப்படி தூக்கிலிட அரசு தரப்பால் நியமிக்கப்பட்ட ஹேங்மேன்தான் பவண் குமார். 3வது தலைமுறையாக இந்த ஹேங்மேன் பணியை செய்து வருகிறார் பவண் குமார். இதற்கு முன்னர் அவரது தாத்தா, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைக் கொன்ற 2 பேரைத் தூக்கிலிட்டவர். ஆனால், இதுதான் பவண் குமாரின் முதல் தண்டனை நிறைவேற்றமாக இருக்கும். 

Advertisement

மரண தண்டனை அவசியமா என்பது குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்து வரும் நிலையில் பவண் குமார், “தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறைவாக இருக்கும். அவர்களுக்கு நீங்கள் ஆயுள் தண்டனை கொடுத்தால், அதை எதிர்த்து மேல் முறையீடு செய்து விடுதலை ஆவார்கள். மீண்டும் அதே குற்றத்தைப் புரிவார்கள். அவர்களைப் போன்றவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு அது பாடமாக இருக்கும்,” என்று திட்டவட்டமாக கூறுகிறார். 
 

Advertisement